தொடர்ந்து உதவிகளை செய்து வந்தால் கமிட் ஆன படங்களுக்கு ஏற்பட்ட சிக்கல் (ரொம்ப நல்லவனா இருந்தாலும் பிரச்சனை தான் போல)

0
273
sonu
- Advertisement -

இந்தியாவில் மிகப் பிரபலமான திரைப்பட நடிகர்களில் ஒருவர் சோனு சூட். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். 1999ஆம் ஆண்டு தமிழ் சினிமா மூலம் தான் இவர் நடிகனாக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியுள்ளார். அதிலும் கொரோனா காலகட்டம் துவங்கியது முதல் பல உதவிகளை செய்து வந்தார் சோனு.

-விளம்பரம்-

மஹாராஷ்டிரா மற்றும் தானேவில் இருந்து புறப்பட 10 சொகுசு பேருந்துகளை இலவசமாக ஏற்பாடு செய்திருந்தார். அவரது 6 மாடி கொண்ட ஹோட்டலை, ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார். சமீபத்தில் கூட விவசாயி ஒருவருக்கு டிராக்டர் ஒன்றை வாங்கி கொடுத்தார். இதேபோல கோவிட்-19 தொற்றால் வீடு திரும்ப முடியாமல் ரஷ்யாவில் சிக்கியிருந்த 105 தமிழக மாணவர்கள் சென்னை திரும்ப நடிகர் சோனு சூட் உதவியுள்ளார்.

- Advertisement -

லாக்டவுன் நாயகன் :

இப்படி ஒரு நிலையில் தொடர்ந்து உதவி செய்து வந்து மக்கள் மத்தியில் ஹீரோவாக மாறிய சோனு சூத்துக்கு அதுவே தற்போது வினையாக மாறி இருக்கிறது. சோனு சூட் கொரோனாவிற்கு முன்பு பெரும்பாலும் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் அதிகமாக நடித்து வந்தார். ஆனால் இப்போது வில்லன் கதாபாத்திரம் தனக்குக் கிடைப்பதில்லை என்று சோனு சூட் வருத்தப்பட்டார். நல்லவன் என்ற இமேஜ் ஏற்பட்டுவிட்டதால் யாரும் எனக்கு வில்லன் கதாபாத்திரம் கொடுக்க மறுக்கின்றனர்.

உண்மையான ஹீரோ வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க யார் விரும்புவார்கள்?. யாரும் எனக்கு வில்லன் கதாபாத்திரத்தைக் கொடுக்க மறுக்கின்றனர். கொரொனாவிற்கு முந்தைய காலக்கட்டத்தில் ஒப்புக்கொண்ட படத்தில்கூட எனக்கு தக்கபடி கதை மாற்றுகின்றனர். படத்தில் என்னை நல்லவனாக காட்ட ஒட்டுமொத்த கதையும் மாற்றுகின்றனர் என்று தெரிவித்து இருக்கிறார் சோனு.

-விளம்பரம்-

பீர் வாங்கித்தர முடியுமான்னுலா கேக்குறாங்க :

சோனு சூட்டிடம் இப்போதும் சமூக வலைதளத்தில் மக்கள் உதவி கேட்டு தகவல்களை பதிவிட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். இது தொடர்பாக சோனு சூட் கூறுகையில், “கடந்த இரண்டு ஆண்டில் சமூக வலைதளத்தில் ஏராளமான கோரிக்கைகள் வருகின்றன. சில நேரங்களில் பீர் வாங்கிக்கொடுக்க முடியுமா என்று கூட கேட்கின்றனர் என்று சிரித்துக்கொண்டே தெரிவித்தார். சோனு சூத்துக்கு ஏற்கனவே சில பிரச்சனைகள் ஏற்பட்டு இருந்தது.

வருமான வரி சோதனை :

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 நாட்களாக மும்பை, லக்னோ, கண்பூர், ஜெய்ப்பூர், குருகிராம் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் சோனு சூட்டுக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிந்த பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் சோனு 20 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக தெரிவித்தனர்.நடிகர் சோனு சூட் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து தான் இந்த அதிரடி சோதனை நடந்தது என்று கூறப்பட்டது.

Advertisement