சூரரை போற்று பட நடிகை ஏற்கனவே இந்த படத்தில் நடித்தவர் தானா.

0
1588
Aparna
- Advertisement -

இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து இருக்கும் படம் “சூரரைப் போற்று”. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாது. இந்த டீசர் வெளியானதில் இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடித்து உள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.

-விளம்பரம்-
Nee Illai Endraal - Song Download from 8 Thottakkal @ JioSaavn

இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்து உள்ளது. நடிகை அபர்ணா பாலமுரளி அவர்கள் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகை மற்றும் பின்னணி பாடகி ஆவார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

- Advertisement -

அபர்ணா பாலமுரளி கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் நகரத்தில் பிறந்தவர். இவரின் பெற்றோர்களான கே பி பாலமுரளி மற்றும் சோபா பாலமுரளி ஆகியோர் மலையாள திரையுலகில் பிரபலமானவர்கள். நடிகை அபர்ணா பாலமுரளி பிறப்பிலேயே ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் தனது தந்தையின் வழிகாட்டுதல் படி மூலம் தான் சினிமா உலகில் பின்னணி பாடகி ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவர் பரதநாட்டியம், மோஹினியாட்டம், குச்சிப்புடி ஆகிய நடனங்களை முறைப்படி கற்றுள்ளார்.

8 Thottakkal review: A satisfying thriller that could have been ...

நடிகை ஏற்கனவே 8 தோட்டாக்கள் படத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு சூரரை போற்று திரைப்படம் தான் முதல் படம் என்று பலரும் நினைத்து வருகின்றனர். சூரரை போற்று திரைப்படம் இவருக்கு மாபெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement