என்கிட்டே கேக்காம எப்படி ரீ – மேக் பண்ணுவீங்க – சூரரை போற்று இந்தி ரீ மேக்கிற்கு தடை.

0
2816
- Advertisement -

சமீப காலமாக தமிழில் ஹிட்டான படங்கள் இந்தியில் ரீ – மேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் படமான சூரரை போற்று திரைப்படம் தற்போது இந்தியில் ரீ – மேக் செய்யப்படுகிறது. இறுதிச்சுற்று புகழ் சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சூரரைப்போற்று திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளிநடித்து இருந்தார். இந்த படத்தில் இவர்களுடன் ஜாக்கி ஷெராப், ஊர்வசி உட்பட பலர் நடித்து இருந்தனர். நிக்கேத் பொம்மி ரெட்டி அவர்கள் இந்த படத்திற்கு ஒளிப்பதிவுசெய்து இருந்தார்.

-விளம்பரம்-
Udaan - Soorarai Pottru Full Movie Hindi Watch Download Online Free – Suriya

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் சிக்கியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இந்த படத்தைதயாரித்து இருந்தனர். கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படம் அமேசான் பிரேமில் வெளியாகி இருந்தது.ஏர் டெக்கான் உரிமையாளர் ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை இன்ஸ்பயர் ஆகி எடுத்த படம். சினிமாவுக்கான சில விஷயங்களைச் சேர்த்து இந்த கதையை உருவாக்கி இருந்தனர்.

இதையும் பாருங்க : சிம்பு படத்திற்கு ரெட் கார்டு, காலேஜ் சீட் மூலம் சமரசம் – புலம்பும் இரண்டு தயாரிப்பாளர்கள். (முழு விவரம் இதான்)

- Advertisement -

.இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை இந்தியில் ரீ – மேக் செய்ய இருக்கின்றனர். நடிகர் சூர்யா அவர்களின் 2D என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்தியில் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்து இருந்த்னர். இந்த நிலையில் இந்த படத்தை இந்தியில் ரீ – மேக் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சிக்யா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த குனீத் மொங்கா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் இணைந்து ‘சூரரைப்போற்று’ படத்தை தயாரித்ததாகவும், இந்தி ரீமேக் உரிமையை விற்றதில், ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தின்படி தன்னுடன் கலந்து ஆலோசிக்காமல் சூர்யா தன்னிச்சையாக செயல்பட்டுள்ளதாகவும் குனீத் மொங்கா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ‘சூரரைப்போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கிற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. 

-விளம்பரம்-
Advertisement