சூரரை போற்று பட நடிகை, 4 ஆண்டுகளுக்கு முன் அட்டை படத்திற்கு கொடுத்த போஸை பாருங்க.

0
23211
aparna
- Advertisement -

இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து இருக்கும் படம் “சூரரைப் போற்று”. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாது. இந்த டீசர் வெளியானதில் இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடித்து உள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்து உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கும் அபர்ணா முரளி அவர்கள் பிரபல விளம்பர பத்திரிகை அட்டை படத்திற்கு கொடுத்துள்ள போஸ் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படம் குறித்து நெட்டிசன்கள் பலவிதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : பேபி அனிகாவிற்கு போட்டியாக புடவையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ள விஸ்வாசம் பட நட்சத்திரம்.

-விளம்பரம்-

நடிகை அபர்ணா பாலமுரளி அவர்கள் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகை மற்றும் பின்னணி பாடகி ஆவார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அபர்ணா பாலமுரளி கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் நகரத்தில் பிறந்தவர். இவரின் பெற்றோர்களான கே பி பாலமுரளி மற்றும் சோபா பாலமுரளி ஆகியோர் மலையாள திரையுலகில் பிரபலமானவர்கள். நடிகை அபர்ணா பாலமுரளி பிறப்பிலேயே ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் தனது தந்தையின் வழிகாட்டுதல் படி மூலம் தான் சினிமா உலகில் பின்னணி பாடகி ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவர் பரதநாட்டியம், மோஹினியாட்டம், குச்சிப்புடி ஆகிய நடனங்களை முறைப்படி கற்றுள்ளார்.

மலையாளத்தில் 2013ம் ஆண்டு வெளியான “யாத்ரா துடருன்னு” என்னும் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமானர். தற்போது இவர் தமிழில் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியான “சூரரைப் போற்று” படத்தில் நாயகியாக நடித்து உள்ளார். இந்நிலையில் நடிகை அபர்ணா2016 ஆம் ஆண்டு பத்திரிகை அட்டை படத்திற்கு கொடுத்து உள்ள கண்ட்ராவியானா போஸை பார்த்து ரசிகர்கள் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர். அந்த போஸில் நடிகை அபர்ணா அடர் பச்சை வண்ண நிறத்தில் உதட்டு சாயம் பூசிக்கொண்டு, இறுக்கமான கவர்ச்சி உடையில் அமர்ந்திருக்கிறார்.

Advertisement