25 ஆண்டுகளை நிறைவு செய்த பொம்மி பேக்கரி – அதன் உண்மையான பெயர் இது தானா. புகைப்படம் இதோ.

0
1167
gr
பொதுவாகவே உலகில் மிக பிரபலமான சாதனையாளர்களை வைத்து படம் இயக்குவது வழக்கமான ஒன்று. சமீப காலமாகவே அனைத்து சினிமா திரை உலகிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்களை தந்து வருகிறார்கள். அதிலும் பெயர் மறந்த இந்தியர்களை வைத்து படம் உருவாக்குவது சினிமாவில் அவ்வபோது தான் நிகளும். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரை போற்று' திரைப்படமும் ஒருவரின் வாழ்கை சம்பவம் தான்.இந்த படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்.

இந்த படத்தில் சூர்யா, ஜி ஆர் கோபிநாத்தின் கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருந்தார். இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பையும் தாண்டி பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அபர்ணா முரளியின் நடிப்பும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. பல சிங்கிள்ஸ்களும் தங்களது வாழ்வில் பொம்மி போன்ற ஓரு குணம் கொண்ட பெண் தான் வேண்டும் என்று சமூக வலைதளத்தில் மீம்களை அள்ளி வீசி வருகின்றனர்.

இதையும் பாருங்க : எனக்கு ரெட் கார்ட் கொடுத்த காரணம் ? பாலாஜிக்கு ஏன் கொடுக்கல ? சரவணன் கொடுத்த லேட்டஸ்ட் விளக்கம்.

- Advertisement -
சமீபத்தில் இந்த படத்தை பார்த்துவிட்டு கோபிநாத் ட்வீட் செய்திருந்தார். அதில், பெரும் முரண்பாடுகளில் பின்தங்கிய கிராமப்புற பின்னணியைக் கொண்ட ஒரு தொழில்முனைவோரின் போராட்டங்கள் மற்றும் இன்னல்களுக்கு எதிரான நம்பிக்கையின் வெற்றியின் அழியாத ஆவிக்கு நாடகமாக்கப்பட்டது, ஆனால் உண்மை.கனவுகளை நனவாக்கும் பைத்தியக்காரத்தனமாக இருந்த ஒரு தொழில்முனைவோரின் பகுதியை சூர்யா மிகவும் பலமாக எடுத்து சென்று இருக்கிறார். இருண்ட இந்த காலங்களில் ஒரு சரியான மற்றும் சிறந்த மேம்பட்ட கதை என்று பதிவிட்டு இருந்தார். 
மேலும்,அபர்ணாவால் என் மனைவி பார்கவியின் சித்தரிப்பு மிகவும் அழகாக இருந்தது என்றும் கூறி இருந்தார். இந்த படம் வெளியான பின்னர் பலரும் உண்மையில் பொம்மி பேக்கரி இருக்கிறதா என்று கூகுள் கூட செய்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் அதர்க்கான விடையை கூறியுள்ளார் கோபிநாத். ஆம், உண்மையில் கோபிநாத் மனைவி பேக்கரி நடத்தி வந்துள்ளார். ஆனால், அந்த பேக்கரியின் பெயர் படத்தில் வந்தது போல பொம்மி பேக்கரி இல்லை அதன் பெயர் 'Bun World Iyengar Bakery '. நேற்றோடு அந்த பேக்கரி துருக்கப்ட்டு 25 ஆண்டுகள் ஆனதையொட்டி தனது மனைவியின் பேக்கரி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் கோபிநாத்.  
Advertisement