எனக்கு ரெட் கார்ட் கொடுத்த காரணம் ? பாலாஜிக்கு ஏன் கொடுக்கல ? சரவணன் கொடுத்த லேட்டஸ்ட் விளக்கம்.

0
66042
saravanan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் சர்ச்சைக்குரிய போட்டியாளராக திகழ்ந்து வருபவர் பாலாஜி தான். கடந்த நவம்பர் 3 ஆம் தேதி ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி இருந்தது. போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் யாரிடம் பிரச்சனை இருக்கிறதோ அதனை புகாராக எழுத வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.பாலாஜி மற்றும் சனம் ஆகி இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி புகார்களை எழுதினர். ஆனால், அந்த ப்ரோமோவை நீக்கியது விஜய் டிவி. என்ன காரணம் என்று பார்த்தால், சனம் ஷெட்டி, பாலாஜிக்கு எதிராக எழுதிய புகார் தான்.

-விளம்பரம்-
saravanan

சனம் ஷெட்டி எழுதிய கடிதத்தில் பாலாஜி,நான் டைட்டில் வின்னராக இருக்கும் பியூட்டி பேஜன்டுக்கு எதிராக அட்ஜஸ்ட்டமென்ட் மற்றும் காம்ப்ரமைஸ் என்ற வார்த்தையை பயன்டுத்தியதாகவும். யாரோ ஒரு மூன்றாம் நபர் சொன்ன ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்னுடைய நேர்மைக்கு களங்கம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயம் வெளியானால் கண்டிப்பாக சமந்தபட்ட அந்த பியூட்டி பேஜன்ட் நிறுவனமும் அதில் பங்குபெற்ற அணைத்து பெண் போட்டியாளர்களும் பாலாஜிக்கு எதிராக குற்றம் சாட்ட வாய்ப்பு இருக்கிறது. எனவே, இதனை பெரிதாக்க விரும்பாமல் ப்ரோமோவையே நீக்கியது விஜய் டிவி.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சரவணன், பாலாஜிக்கு ரெட் கார்டு அளிக்கப்படாதது குறித்து பேசியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஆண்டு பல்வேறு அமுலி துமுளிகளுடன் நிறைவடைந்தது .பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பல போட்டியாளர்கள் வெளியேறினாலும் சரவணன் மற்றும் மதுமிதாவின் வெளியேற்றம் தான் மிகவும் ரகசியமாக இன்னும் இருந்து வந்தது.இதில் சரவணனின் வெளியேற்றம் தான் மிகவும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.ஒரு எபிசோடில் கமலிடம், சிறு வயதில் தானும் பேருந்தில் பெண்களை உரசி இருக்கிறேன் என்று கூறி இருந்தது பெரும் சர்ச்சையாக மாறியது.

வீடியோவில் 3 : 38 நிமிடத்தில் பார்க்கவும்

ஒரு தேசிய தொலைக்காட்சியில் பெண்கள் குறித்து சரவணன் எப்படி இவ்வாறு சொல்லலாம் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்தார் பிக் பாஸ்.இருப்பினும் மன்னிப்பு கேட்ட பின் சிறிது நாட்கள் கழித்து சரவணனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வலுக்கட்டாயமான வெளியேற்றினார்கள். சரவணன் மன்னிப்பு கேட்டும் ஏன் அவரை வெளியிற்றினார்கள் என்று பலரும் கேள்விகளை கேட்க துவங்கினார்கள்.இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சரவணனிடம் உங்களுக்கு கொடுத்தது போல பாலாஜிக்கு ஏன் ரெட் கார்ட் கொடுப்படவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இதற்கு பதில் அளித்த சரவணன், எனக்கு ஏன் நடந்தது என்பது எனக்கு இதுவரை தெரியவில்லை. நான் பிக்பாஸில் இருந்து வெளியே வந்து உடன் பேட்டி எடுத்தபோது அப்போதே சொல்லிவிட்டேன் பிக்பாஸ் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்று. அதனால் விஜய் டிவி பற்றியும் பிக்பாஸ் பற்றியும் நான் எங்கேயும் எப்போதும் பேசுவதில்லை. பாலாஜியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு ஏன் ரெக்கார்டு கொடுக்கவில்லை என்று கமல் சார் மற்றும் அவர்களது டீம் கிட்ட தான் கேட்க வேண்டும். என்னைப்பற்றிய எனக்குத் தெரியவில்லை அதனால் அதை பற்றி எனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார்

Advertisement