என்னது, சூரரை போற்று படத்தில் வந்த இவர் உண்மையில் பைலட் தானாம். அதுவும் இந்த விமானத்தில்.

0
1432
varsha
- Advertisement -

சூர்யா நடிப்பில் இறுதி சுற்று சுதா இயக்கத்தில் வெளியான ‘சூரரை போற்று ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பொதுவாகவே உலகில் மிக பிரபலமான சாதனையாளர்களை வைத்து படம் இயக்குவது வழக்கமான ஒன்று. சமீப காலமாகவே அனைத்து சினிமா திரை உலகிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்களை தந்து வருகிறார்கள். அதிலும் பெயர் மறந்த இந்தியர்களை வைத்து படம் உருவாக்குவது சினிமாவில் அவ்வபோது தான் நிகளும். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரை போற்று’ திரைப்படமும் சாதனை படைத்த இந்தியர் ஒருவரின் வாழ்கை சம்பவம் தான்.

-விளம்பரம்-

இந்த படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும். தமிழில் இந்த மாதிரி எடுக்கப்படும் படம் மிகவும் அரிதான செயலாகும். இந்த படம் விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். ஒரு சாதாரண மனிதன், அவனின் மலிவு விலை விமான டிக்கெட் கனவு, ஏர் ஒட்டுகிறவனும் ஏரோ பிளானில் பறக்க வைக்க வேண்டும் என்ற ஒரு லட்சியம்.இது தான் சூரரை போற்று படத்தில் வரும் நெடுமாறனின் கதாபாத்திரம்.

- Advertisement -

அதே போல இந்த படத்தின் பல காட்சிகள் ஒரு முறை பார்த்தாலும் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிடும். அதேபோல இந்த படத்தில் ஒரு காட்சியில் தோன்றிய நடிகர் நடிகைகள் கூட சமீபத்தில் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறார்கள் அந்த வகையில் இவரும் ஒருவர் தான். இந்த படத்தின் இறுதி காட்சியில் பைலட் உடையை அணிந்து கொண்டு இதே பெண் ஒரு சிறு காட்சியில் மிகவும் கெத்தாக நடந்து வருவார்.

ஆனால், உண்மையில் இவர் ஒரு பைலட் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. இவருடைய பெயர் வர்ஷா நாயர். கேரளாவில் பூர்வீகமாக கொண்ட இவர் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். இதனால் இவரை சென்னை பெண் என்று தான் அழைத்து வருகிறார்கள். இவர் இண்டிகோ விமான சேவையில் பைலட்டாக பணியாற்றி வருகிறார். இந்த திரைப்படம் விமான சம்பந்தப்பட்ட திரைப்படம் என்பதால் இந்த படத்தின் இயக்குனர் சுதா இவரை சிறப்பு அழைப்பு விடுத்து இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement