ஒத்துழைங்க சூரி – நில மோசடி புகாரில் நீதி மன்றம் சொன்னது இதனாம்.

0
798
soori
- Advertisement -

கடந்த 2015 ஆம் ஆண்டு அன்புவேல்ராஜன்  தயாரிப்பில் ‘வீர தீர சூரன்’ என்ற படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க அந்த படத்தில் காமெடி நடிகராக சூரியும் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். அப்போது நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆனால் பேசப்பட்ட சம்பளம் பணத்திற்கு பதிலாக மேலும் சில கோடிகள் கொடுத்தால் அந்த பணத்தில் நிலம் வாங்கித் தருவதாக படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் விஷ்ணு விஷாலின் தந்தையான ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் கூறியதாக தெரிகிறது.இதனடிப்படையில் நடிகர் சூரி இடம் பல்வேறு தவணை முறையில் 3.10 கோடி பெற்று சென்னையில் அடுத்த சிறுசேரியில் உள்ள இடம் ஒன்றை சூரி வாங்கியிருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is soori-vishnuvishaldad23102020m.jpg

ஆனால் நிலம் வாங்கிய பின்னர்தான் அந்த இடம் அரசு அங்கீகாரம் பெற்ற இடம் இல்லை என்று சூரிக்கு தெரியவர பின்னர் அந்த நிலம் குறித்து டிஜிபி ரமேஷிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த இடத்தை பெற்றுக் கொண்டு தன்னுடைய பணத்தை தருமாறு சூரிய கேட்டிருக்கிறார். அதற்கு ஒப்புக் கொண்டுள்ள ரமேஷ் 40 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு மீதம் 2.70 கோடி தராமல் இழுத்தடித்துள்ளார்.இதனால் நடிகர் சூரி, சூரி அளித்த புகாரின் அடிப்படையில் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது போலீஸார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், சூரியின் குற்றச்சாட்டை மறுத்தார் விஷ்ணு விஷால்.

- Advertisement -

இந்த வழக்கின் விசாரணை கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால் அவருக்கு எதிராக விசாரணை நடத்தும் அதிகாரிகள் அவருக்கு சாதகமாக செயல்படுவதாக சூரி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கில் தான் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதி விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கின் விசாரணை மீண்டும் துவங்கி இருந்தது.

Vishnu Vishal's father RC Kudawla gets promoted to Police DGP

இதில் நடிகர் சூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நில மோசடி தொடர்பாக முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலாவின் ஆடியோ பதிவு மற்றும் ஆதாரங்களை வைத்திருப்பதாகக் கூறினார். இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சூரியிடம் உள்ள ஆதாரங்களை அடையாறு போலீசாரிடம் ஒப்படைத்து விசாரணைக்கு ஒத்துழைக்கக் கூறி, விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

-விளம்பரம்-
Advertisement