20 வருடங்களுக்கு முன் கௌண்டமணி படத்தில் சூரி பேசிய முதல் வசனம்.! அவரே பதிவிட்ட அரிய வீடியோ.!

0
33999
goundamani-soori

காமெடி நடிகர் சூரி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக்,சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் க லாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம் அதுபோல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயன்படுத்து காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

தமிழில் உள்ள பெரும்பான்மையான நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்துவிட்டார் சூரி. ஆனால், சமீப காலமாக இவரது காமெடி மக்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தி வருகிறது, இருப்பினும் வரிசையாக பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார் நடிகர் சூரி.

இதையும் பாருங்க : கேமராவில் சிக்கிய கடிதம்.! தர்ஷனுக்காக மறைத்து மறைத்து அப்படி என்ன எழுதியுள்ளார் ஷெரின்.!

- Advertisement -

நடிகர் சூரி ஒரு முன்னணி காமெடியனாக வளம் வருவதற்கு முன்பாக சிறு சிறு கதாபாத்திரத்தில் முகம் காண்பித்து வந்தார். பிரபு தேவா நடித்த ‘நினைவிருக்கும் வரை ‘ ,’ஜேம்ஸ் பாண்டு’ போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூரி. மேலும், சினிமாவில் வருவதற்கு முன்பாக திருமதி செல்வம், புஷ்பாஞ்சலி, மைதிலி, ஜென்மம் எக்ஸ் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் 20 வருடங்களுக்கு முன் சூரி, காமெடி கிங் கௌண்டமணி படத்தில் ஒரு சிறு காட்சியில் நடித்துள்ளார். அந்த விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சூரி, 20 வருடங்களுக்கு முன்னர், சினிமாவில் நான் பேசிய முதல் வசனம். நன்றி கவுண்டமணி சார் நன்றி சுந்தர்.சி அண்ணன். படம் “கண்ணன் வருவான்” என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


Advertisement