‘எங்க வீட்டு பொண்ணுக்கு பேய் புடிச்சி இருக்கு’ வெளியான சூரியின் கொட்டுக்காளி டிரெய்லர்

0
287
- Advertisement -

நடிகர் சூரியின் கொட்டுக்காளி படத்தினுடைய ட்ரெய்லர் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கிறார் சூரி. அந்த வகையில் இவர் முதன் முதலாக தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ என்ற படத்தின் மூலம் தான் ஹீரோ ஆனார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஜிவி அறிமுகமாகி இருந்தார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இயமைத்திருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. முதல் படமே சூரிக்கு மிக பெரிய பெயரை வாங்கி தந்தது.

- Advertisement -

சூரி நடிக்கும் படம்:

இதை அடுத்து தற்போது ‘விடுதலை 2’ உருவாகி வருகிறது. அதன் பின் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியிருந்த ‘கருடன்’ படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது.

கொட்டுக்காளி படம்:

மேலும் , கூழாங்கல் படத்தை இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படம் இந்திய சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்கள் மத்தியிலும் பேராதரவையும் விருதுகளையும் வென்றிருக்கிறது. தற்போது பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அடுத்த படைப்பு ‘கொட்டுக்காளி’. இந்த படத்தை சிவகார்திகேயன் தயாரித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

கொட்டுக்காளி படம் ட்ரைலர்:

இந்தப்படத்தில் சூரி, அன்னா பென் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இதில் ஆரம்பத்திலேயே சூரி, எங்க வீட்டு பிள்ளைக்கு பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லி எல்லோருமே வண்டியை எடுத்துக்கொண்டு பரபரப்பாக செல்கிறார்கள். ட்ரெய்லரை பார்ப்பதற்கு ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு ட்ரைலர் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சூரி குறித்த தகவல்:

மேலும், சூரி சீரியலில் தான் நடிகராகவும் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நினைவிருக்கும் வரை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். ஆனால், இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வெண்ணிலா கபடி’ குழு படத்தின் மூலம் தான். அந்த படத்தில் இவர் புரோட்டா சாப்பிட்டதன் மூலம் தான் புரோட்டா சூரி என்றே பெயர் வந்தது.

Advertisement