நடிகர் சூரியின் மாமன் படம் செய்து இருக்கும் மொத்த வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக இருந்து ஹீரோவாக கலக்கி கொண்டிருப்பவர் சூரி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் மாமன்.
இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் தாய்மாமன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் மாமன் படத்தினுடைய மொத்த வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மாமன் படம்:
மாமன் படம் வெளியான அன்று தான் சந்தானம் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியாகியிருந்தது.
இந்த படத்தை நடிகர் ஆர்யா தான் தயாரித்திருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க காமெடி ஹாரர் கதையை மையமாகக் கொண்டிருந்தது. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. சூரியின் மாமன் படம் சந்தானம், யோகி பாபுவின் ஜோரா கைய தட்டுங்க படத்தை விட அதிக வரவேற்பு பெற்று இருக்கிறது. மேலும், முதல் நாளிலேயே சூரி நடித்த மாமன் படம் 1.53 ரூபாய் வசூல் செய்தது.

படத்தின் வசூல்:
முதல் நாளிலேயே இந்த படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் வசூலித்தது. இந்த படம் இதுவரை மொத்தமாக 40 கோடி வசூல் செய்திருக்கிறது. அடுத்த மாதம் இந்த படம் ஓடிடி யில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஓடிடியிலும் இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு சூரியின் கேரியரிலேயே இந்த படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருக்கிறது என்று பலரும் கூறி வருகிறார்கள்.

மாமன் கதைக்களம்:
படத்தில் சூரியின் அக்கா தான் சுவாசிகா. இவருக்கு திருமணம் ஆகி பத்தாண்டுகள் கடந்துமே கர்ப்பமாகவில்லை. இதனால் ஊரில் உள்ள அனைவருமே சூரியின் அக்காவை குறை உள்ள கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தான் முதல் முறையாக சுவாசிகா கர்ப்பம் ஆகிறார். இதனால் சூரி தன் அக்காவை பார்த்து பார்த்து கவனித்துக் கொள்கிறார். அதன் பின் ஆண் குழந்தையும் பிறக்கிறது. தனக்கு மருமகன் பிறந்து விட்டான் என்ற மகிழ்ச்சியில் தன்னுடைய ஒட்டுமொத்த அன்பையுமே சூரி தன்னுடைய மருமகனுக்கு கொடுக்கிறார்.

காலையில் எழுந்து அவனை குளிப்பாட்டி பள்ளிக்கு அனுப்புவது, அவனை தூங்க வைப்பது, சாப்பாடு ஊட்டுவது என பெற்றோர்கள் செய்ய வேண்டிய அனைத்து வேலையுமே சூரி செய்கிறார். இந்த சூழ்நிலையில் தான் சூரிக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகும் சூரியை விட்டு அவருடைய மருமகன் பிரியாமல் கூடவே இருக்கிறார். ஆரம்பத்தில் இதை ஐஸ்வர்யா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை வந்து சண்டை ஏற்பட்டு ஒரு கட்டத்தில் இருவருமே பிரிய முடிவே எடுக்கிறார்கள். இதனால் உறவுகள் இடையே விரிசல் ஏற்படுகிறது. மீண்டும் அந்த உறவுகள் இணைந்ததா? சூரி- ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.






