‘பசங்க’ படத்துல முதலில் இவர்தான் நடிக்க இருந்தது.! காரணம் என்ன தெரியுமா..?சூரி வெளியிட்ட தகவல்.!

0
1932
Pasanga-movie
- Advertisement -

கடைக்குட்டி சிங்கம், சீமராஜா என டபுள் டோஸ் உற்சாகத்தில் இருக்கிறார் சூரி. அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்கள், சினிமா நட்பு, உறவு என்று சூரியிடம் பேசியதிலிருந்து…’ரொம்பப் பரபரப்பா இருக்கேன். இப்பக்கூட மதுரை ஃப்ளைட்டைப் பிடிக்க ஏர்போர்ட்லதான் இருக்கேன். சீக்கிரம் பேசிரலாமா?” – மூச்சுவிடமால் பேசுகிறார் நடிகர் சூரி. ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் இவரின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் சந்தோஷத்தில் இருக்கிறார். அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்கள், சினிமா நட்பு, உறவு… என்று சூரியின் பேட்டியிலிருந்து.

-விளம்பரம்-

pasanga

- Advertisement -

இப்ப, `களவாணி 2′ படத்துக்காக சற்குணம் சார் என்கிட்ட, `படம் முழுக்க நீங்க விமல்கூட டிராவல் பண்ணுற மாதிரியிருக்கும்”னு சொன்னார். வெவ்வேற படங்கள்ல இருந்ததால என்னால கால்ஷீட் கொடுக்க முடியலை. ஆனா, எனக்கும் விமலுக்கும் ஏதோ மனக்கசப்பு. அதனாலதான் சூரி களவாணி-2வுல நடிக்கலைனு புரளியைக் கிளப்பி விட்டுட்டாங்க. விமல் முன்னணி ஹீரோவா வரணும்ங்குறதுதான் என் ஆசை. அது என் ஆசை மட்டுமல்ல… விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனோட ஆசையும்கூட.

`பசங்க’ படத்துல முதல்ல கமிட்டானது விஜய்சேதுபதிதான். ஆனா, `கொஞ்சம் சிவப்பா இருக்குற பையனா இருந்தா நல்லாயிருக்கும்’னு டைரக்டர் பாண்டிராஜ் சார் ஃபீல் பண்ணினார். அந்தச் சமயத்துல விமலை பாண்டிராஜ் சார்ட்ட அறிமுகப்படுத்தி வெச்சேன். விமல் எனக்கு எப்பவும் நல்ல நண்பர். நாளைக்கு எனக்கு ஏதாவது ஒரு பிரச்னைன்னா விமல்தான் முன்னாடி வந்து நிற்பார்.”

-விளம்பரம்-

vijay sethubathi

விஜய்சேதுபதி, என்னோட நெருங்கிய நண்பர். `என்னடா மாமா’னுதான் கூப்பிடுவேன். `சொல்லுடா மச்சான்’னு அவர் சொல்லுவார். கூத்துப்பட்டறை காலத்துல இருந்தே எங்களுக்கு நல்ல பழக்கம். சேர்ந்து நடிக்கணும்னு எங்களுக்கும் ஆசைதான். ஆனா, ஸ்க்ரிப்ட் அமையல. என்னைப் பார்க்கிறப்பல்லாம், `என்னடா.. எல்லாரோடவும் நடிக்கிற, என்கூட எப்படா நடிக்கப்போற’னு கேட்பான். அது என்னனு தெரியல `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துக்குப் பிறகு எங்களுக்கான ஸ்க்ரிப்ட் அமையல. யாராவது நல்ல ஸ்க்ரிப்ட் கொண்டு வந்தா கண்டிப்பா சேர்ந்து நடிப்போம். நாங்களும் அதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.

Advertisement