என் மகளை தகாத வார்த்தைகளில் பேசினார்கள்..! கொலை மிரட்டல்.! ஷோபியாவின் தந்தை உருக்கம்.!

0
1037
sophias
- Advertisement -

என் மகளை அசிங்கமாகப் பேசி, கொலைமிரட்டல் விடுத்து உயிர்பயத்தை ஏற்படுத்திய தமிழிசை உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என கைதான மாணவி ஷோபியாவின் தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

-விளம்பரம்-

shobi

- Advertisement -

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில், 1,000 பேர் பா.ஜ.க-வில் இணையும் விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன். இந்த விமானத்தில், கனடாவில் பி.ஹெச்டி ஆராய்ச்சி செய்யும் மாணவியான, தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த லூயிஸ் ஷோபியா என்ற பெண்ணும் பயணித்துள்ளார். அவர் தமிழிசையைப் பார்த்து, “பாசிச பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக!” எனக் கைகளை உயர்த்திக் கோஷம் எழுப்பினாராம்.

விமானம் தூத்துக்குடி வந்தவுடன், விமான நிலைய வரவேற்பறை அருகில், மீண்டும் தமிழிசையைப் பார்த்து கைகளை உயர்த்திக் கோஷம் எழுப்பினாராம் அந்தப் பெண். தமிழிசையின் ஆதரவாளர்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால் விமான நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

-விளம்பரம்-

Tamilisai-Soundararajan

பின்னர், விமான நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் இண்டிகோ விமான நிறுவன அதிகாரி ஆகியோரிடம் தமிழிசை புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸார், அவர்மீது 505(1)(B), 290 மற்றும் 75 ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தூத்துக்குடி ஜே.எம் நீதிமன்றத்தில், நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

ஷோபியாவை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, நெல்லை மாவட்டம் கொக்கிரகுளத்தில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், “தன் மகளைத் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஆராய்ச்சி மாணவி ஷோபியாவின் தந்தை மருத்துவர் சாமி, தமிழிசை செளந்தரராஜன் உட்பட பா.ஜ.க-வினர் 10 பேர்மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

BJP

அந்தப் புகார் கடிதத்தில் “தன் கட்சித் தொண்டர்களைத் தூண்டிவிட்டு, என்னையும், என் குடும்பத்தினரையும் வழிமறைத்து எனது மகளை அசிங்கமாகப் பேசி எங்களுக்கு மன வேதனையை ஏற்படுத்திய பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உட்பட கட்சி நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கம்படி கேட்டுக்கொள்கிறேன் “ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement