இயக்குனர் நவீத் எஸ் ஃபரீத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சொட்ட சொட்ட நனையுது. இந்த படத்தில் நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி வெங்கட், ஷாலினி, ஆனந்த் பாண்டி, ரியா, பிரியங்கா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை அட்லர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ரெஞ்சித் உன்னி இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் ஹீரோ நிஷாந்த் காரைக்குடியை சேர்ந்தவர். இவருக்கு சின்ன வயதிலிருந்து தலையில் சொட்டை விழுந்துவிட்டது. இதனால இவர் வழுக்கை தலையோடு தான் இருப்பார். இதை பார்த்து பலரும் கிண்டல் கேலி செய்திருக்கிறார்கள். இதனால் இவர் தன்னுடைய வாழ்க்கையை நினைத்து தினமும் கவலைப்படுவார்.
பின் வீட்டில் இவருக்கு திருமண ஏற்பாடுகள் எல்லாம் செய்தார்கள். ஆனால், இவருடைய வழுக்கை தலையை பார்த்து பெண்கள் எல்லோருமே வேண்டாம் என்று நிராகரித்து விடுவார்கள்.
பெண் கிடைக்காததால் ஹீரோ நிஷாந்த்நி ரொம்பவே வேதனைப்படுகிறார். இதற்கிடையில் நிஷாந்தினுடைய எதிர் வீட்டுப் பெண் ஷாலினி. இவர் நிஷாந்தின் உண்மையான அன்பை புரிந்து கொண்டு அவரை திருமணம் செய்து கொள்ள ஒத்துக்கிறார். கல்யாண ஏற்பாடுகளும் சிறப்பாக நடக்கிறது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த உடனே ஹீரோ நிஷாந்த் திருமணத்திற்கு பின்பு தன்னுடைய வாழ்க்கையை நினைத்து சந்தோஷப்படுகிறார்.
அப்போது ஹீரோவுடைய நண்பர்கள் ஒரு வீடியோவை அனுப்பி இருக்கிறார்கள். அதை பார்த்து நிஷாந்த் அதிர்ச்சி அடைகிறார். அதற்கு பிறகு நிஷாந்த், ஷாலினியை வெறுத்து திருமணம் வேண்டாம் என்று நிறுத்தி விடுகிறார். ஷாலினி தன் பக்கம் நியாயத்தை சொல்லக்கூட நிஷாந்த் கேட்கவே இல்லை. அதற்கு பிறகு நிஷாந்த் சென்னைக்கு வந்து தலைமுடிக்கு சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். அப்போது சோசியல் மீடியாவில் ரீல்ஸ் போட்டு வாழும் இன்ஸ்டா பிரபலம் தான் வர்ஷினி.

இவரை திருமணம் செய்து கொள்ள நிஷாந்த் தயாராகிறார். இப்படி இருக்கும் போது ஷாலினி, நிஷாந்தின் நண்பனிடம் ஒரு வீடியோவை மட்டும் பார்த்து தவறான முடிவு எடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று அந்த வீடியோவை பற்றிய உண்மையை சொல்கிறார். அதற்குப்பின் ஷாலினி நிலைமை புரிந்து கொண்ட நிஷாந்தின் நண்பர்கள் நிஷாந்த் - வர்ஷினி திருமணத்தை நிறுத்த போராடுகிறார்கள். இறுதியில் நிஷாந்த்- ஷாலினி திருமணம் நடந்ததா? நிஷாந்த்-வர்ஷினி ஏற்றுக்கொண்டாரா? யாருடன் தான் நிஷாந்த் திருமணம் நடந்தது? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.
இளம் வயதிலேயே வழுக்கை விழும் வாலிபர்களுடைய மனவலியை இந்த படத்தில் நிஷாந்த் நடித்து இருக்கிறார். கச்சிதமாக ராஜா கதாபாத்திரத்தில் நிஷாந்த் தனக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். இவரை அடுத்து படத்தில் வரும் வர்ஷினி, ஷாலினி, அனன்யா பாண்டி, ரியா, பிரியங்கா, ரோபோ சங்கர் எல்லோருமே தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதோட எல்லா கதாபாத்திரத்தையும் இயக்குனர் நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார்.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் முடி உதிர்தல் ஒரு இயல்பான ஒன்றுதான். அது அவர்களுடைய வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது? அதனால அவர்கள் என்னென்ன பிரச்சனை எல்லாம் எதிர்கொள்கிறார்கள்? என்பதையெல்லாம் இயக்குனர் நகைச்சுவை கலந்த பாணியில் கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். இயக்குனர் படத்தை முழுக்க முழுக்க காமெடி பாணியில்தான் எடுத்து சென்றிருக்கிறார்.
இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பையும் சுவாரசியத்தையும் கொடுத்திருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும்.
மற்றபடி படத்தில் பெரிதாக குறைகள் எதுவும் இல்லை. படத்தினுடைய கேமரா, எடிட்டிங், பின்னணி இசை, ஒளிப்பதிவு என தொழில் நுட்ப பணிகள் எல்லாமே நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் சொட்ட சொட்ட நனையுது இருக்கிறது.
https://youtu.be/r0rKZUtMtvw?si=Gr0WW5_HkAYVqeq3
நிறை:
நடிகர்கள் நடிப்பு
வித்தியாசமான கதை
நகைச்சுவை அருமை
ஒளிப்பதிவு, பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது
குறை:
படத்தை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக கொடுத்து இருக்கலாம்
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைகள் எதுவும் இல்லை
மொத்தத்தில் சொட்ட சொட்ட நனையுது - நகைச்சுவை






