இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ரஜினி மகள் சௌந்தர்யாவின் கணவர் – புகைப்படம் உள்ளே

0
4758
Ashwin ramkumar

நடிகர் ரஜினிகாந்த்திற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவருக்கு 1986ஆம் ஆண்டு இரண்டாவது மகளாக பிறந்தவர் சௌந்தர்யா. இவர் ஒரு திரைப்பட கிராபிக்டிசைனர். 1999ஆம் ஆண்டு வெளிவந்த தனது அப்பாவின் படமான படையப்பாவில் வரும் டைட்டில் கார்ட் கிராபிக்கை உருவாக்கியது இவர் தான்.

Soundarya-Ranikanth

மேலும், தன் அப்பாவை வைத்து இயக்கி கோச்சடையான் படத்தின் மூவ்ம் இயங்குனராகவும் அறிமுகம் ஆனார். தன் அப்பாவின் நிழலிலேயே வளர்ந்த இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு அஸ்வின் ராம்குமார் என்னும் பிஸ்னஸ்மேனுடன் திருமணம் நடைபெற்றது.

மேலும், கடந்த 2011ஆம் ஆண்டு ‘வேத்’ என்னும் மகனும் பிறந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு இருவரும் முழுமனதுடன் விவாகரத்து கோறினார். இதனை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து அளித்து தீர்ப்பளித்தது சென்னை குடும்பநல நீதி மன்றம்.

Ashwin

இந்நிலையில் சௌந்தர்யாவின் முன்னாள் கணவர் அஸ்வின் தனது தோழியை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றுள்ளது. இது குறித்து சௌர்ந்தர்யாவோ, அல்லது அவரது முன்னாள் கணவர் அஸ்வினோ இன்னும் பேசவில்லை. இருவரும் கருத்து கூறினால்தான் இது குறித்தான செய்திகள் வெளிவரும்.