பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பிறகு நன்றி தெரிவித்து சௌந்தர்யா பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 105 நாட்கள் நடந்து வெற்றிகரமாக முடிந்தது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள்.
அதன் பின் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் ராயன் தான் வெற்றி பெற்றார். நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்குவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டி, சண்டை, சச்சரவு எல்லாம் நடந்து கொண்டு இருந்தது.
பிக் பாஸ் 8:
பின் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக இந்த பணப்பெட்டி டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருந்தார். அதாவது, பிக் பாஸ் வீட்டுக்குள் வெளியே வைக்கப்பட்டிருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து விட்டால் அந்த பணத்துடனே அவர்கள் நிகழ்ச்சியில் மீண்டும் தொடரலாம். அப்படி இல்லாதவர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும். அந்த வகையில் இந்த டாஸ்க்கில் ராயன், முத்துக்குமரன், விஷால், பவித்ரா ஆகியோர் பணப்பெட்டி டாஸ்க்கை விளையாடி வெற்றி பெற்று விட்டார்கள். ஆனால், ஜாக்குலின் தான் இந்த டாஸ்க்கில் தோல்வி அடைந்திருந்தார்.

டைட்டில் வின்னர்:
இவரின் எலிமினேஷன் எல்லோருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் நிகழ்ச்சியின் grand finale சுற்று நேற்று நடந்து இருந்தது. முத்துக்குமரன் தான் டைட்டில் பட்டதை வென்று கோப்பையை வாங்கி இருந்தார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை சௌந்தர்யா, மூன்றாம் இடத்தை விஷால், நான்காம் இடத்தை பவித்ரா, ஐந்தாம் இடத்தை ராயன் வென்று இருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

சௌந்தர்யா பதிவு:
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சௌந்தர்யா போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நீங்கள் எனக்கு அளித்த வாக்குகளும், ஊக்கமளித்த வார்த்தைகளும் தான் என்னை கஷ்டமான கால நாட்களில் கடந்து செல்ல வைத்தது. நீங்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக நின்று இருக்கிறீர்கள். என்னை நம்பி காப்பாற்றியும் இருக்கிறீர்கள். உங்களில் பலர் நான் வெற்றி பெறுவதை காத்திருந்தீர்கள் என்று அறிந்தேன். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நன்றி உணர்வு, மகிழ்ச்சியும் என்னுடைய இதயத்தை நிரப்பியது.
View this post on Instagram
நன்றி சொன்ன சௌந்தர்யா:
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பிடித்தது என்னுடைய சாதனை இல்லை. இந்த வெற்றி நம் அனைவருக்கும் ஆனது. வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய @pradeepmilroy சார் @balachandran_ratnavel சார் @kriskuty சார் அவர்களுக்கும் அற்புதமான தொகுப்பாளராக இருந்த விஜய் சேதுபதி சார் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பயணம் முழுவதும் எனக்கு உறுதுணையாகவும் பலமாகவும் இருந்து என்னுடைய குடும்பத்திற்கு நன்றி. இது முடிவல்ல வெறும் ஆரம்பம் தான். நீங்கள் அனைவரும் என் பக்கத்தில் இருப்பதால் உலகை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். உங்கள் அனைவரையும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நேசிக்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.






