கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த்க்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா பிரபல நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இளைய மகள் சௌந்தர்யா. கடந்த ஆண்டு தான் இவருக்கு இரண்டாவது திருமணம் நடந்தது. இது அனைவருக்கும் தெரிந்தது தான். ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமான அளவில் திருமணம் நடந்தது. முதலில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்திருந்தனர்.
பின்னர் சௌந்தர்யா மற்றும் அவர் கணவன் அஸ்வின் இருவரும் மனமுவந்து பிரிக்கிறோம் என்று சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் தாக்குதல் செய்தனர். இவர்கள் விவாகரத்தும் பெற்றுக் கொண்டார்கள். அதுக்கு பின் சௌந்தர்யா தன்னுடைய மகன் வேத்துடன் ரஜினிகாந்த் வீட்டில் தான் வசித்து வந்தார். சௌந்தர்யா விவாகரத்துக்கு பின் முழு கவனத்தையும் திரைப்படங்கள் இயக்குவதும், அனிமேஷன் காட்சிகள் வடிவமைப்பது போன்ற வேலைகளில் தீவிரம் செலுத்தி வந்திருந்தார். இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த், கோவை தொழிலதிபர் வணங்காமுடி மகன் விசாகன் ஆகிய இருவரும் காதலித்து வந்தார்கள் என்ற தகவல் வெளியானது.
மேலும், இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தார்கள். தற்போது விசாகனுக்கும் சௌந்தர்யாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது. விசாகன் சௌந்தர்யாவின் மகன் வேத்தை தன்னுடைய மடியில் தூக்கி வைத்தபடி தான் சௌந்தர்யா கழுத்தில் தாலி கட்டினார். சௌந்தர்யா அவர்கள் அவ்வப்போது அப்பா– மகன் செய்யும் குறும்புத்தனமான விளையாட்டு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் மகளும், இயக்குனருமான சவுந்தர்யா ரஜினிகாந்த் இந்த வருடம் தன்னுடைய முதல் வருட திருமண நாள் கொண்டாட்டத்தையும், இரண்டாவது ஆண்டு காதலர் தினத்தையும் தன்னுடைய கணவர் விஷாகன் உடன் சேர்ந்து காதல் நகரமான பாரிசில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். சௌந்தர்யா பாரிஸ் ஈபிள் டவர் முன்பு தன் கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளார். கடந்த வருடம் திருமணம் முடிந்த கையோடு இவர்கள் இருவரும் முதல் காதலர் தினத்தை கொண்டாடினார்கள். தற்போது தனது இரண்டாவது காதலர் தினத்தையும், முதல் கல்யாண நாளையும் பாரிஸில் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளார்கள்.