நாட்ல பிரச்சனை போய்ட்டிருக்க இது தான் முக்கியமா.! சௌந்தர்யாவின் டீவீட்டால் கடுப்பான நெட்டிசன்கள்.!

0
1361
soundarya
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி திருமணம் நடைபெற்றது. அரசியல் பிரமுகரின் குடும்பத்தை சேர்ந்த தொழிலதிபருமான விசாகனை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் சௌந்தர்யா.  

-விளம்பரம்-

விசாகன் ‘வஞ்சகர் உலகம் ‘ என்ற படத்தில் நடித்துள்ளார் மேலும், இவருக்கு கனிகா என்ற பெண்ணுடன் ஏற்கனவேய திருமணமாகி விவாகரத்தும் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விசாகனை திருமணம் செய்துகொண்டார் சௌந்தர்யா.

- Advertisement -

]சென்னையில் வெகு விமர்சியாக நடைபெற்றது இந்த திருமணம். இந்த திருமணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி, தி மு க தலைவர் ஸ்டாலின், திருமாவளவன், வைகா போன்ற அரசியல் பிரமுகர்களும், பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் விசாகனுடன் தேனிலவு கொண்டாடிய சௌந்தர்யா அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனை ட்விட்டர் வாசிகள் வறுத்தெடுத்து வந்தனர். அதற்கு முக்கிய காரணமே கடந்த 14 ஆம் காஸ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் அதனை பொருட்படுத்தாமல் தேனிலவு கொண்டாடிய புகைப்படத்தை சௌந்தர்யா பதிவிட்டது தான்.

-விளம்பரம்-
Advertisement