ரஜினி இரண்டாவது மகளின் இரண்டாவது திருமணம்.! தேதி அறிவிப்பு.!

0
425
soundarya

நடிகர் ரஜினிகாந்த்திற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவருக்கு 1986ஆம் ஆண்டு இரண்டாவது மகளாக பிறந்தவர் சௌந்தர்யா. இவர் ஒரு திரைப்பட கிராபிக்டிசைனர். 1999ஆம் ஆண்டு வெளிவந்த  படையப்பாவில் வரும் டைட்டில் கார்ட் கிராபிக்கை உருவாக்கியது இவர் தான்.

மேலும், தன் அப்பாவை வைத்து இயக்கி கோச்சடையான் படத்தின் மூவ்ம் இயங்குனராகவும் அறிமுகம் ஆனார். தன் அப்பாவின் நிழலிலேயே வளர்ந்த இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு அஷ்வின் என்னும் பிஸ்னஸ்மேனுடன் திருமணம் நடைபெற்றது.

இதையும் படியுங்க : சௌந்தர்யா ரஜினிகாந்த் இரண்டாவது கணவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..! 

மேலும், இவர்கள் இருவருக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு ‘வேத்’ என்னும் மகனும் பிறந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு இருவரும் முழுமனதுடன் விவாகரத்து கோறினார். அதை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து அளித்து தீர்ப்பளித்தது சென்னை குடும்பநல நீதி மன்றம். 

இந்நிலையில் கோவையை சேர்ந்த கோவை முன்னாள் எம் எல் ஏ பொன்முடியின் மகன் விசாகன் என்பவரை சௌந்தர்யா இரண்டாம் திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியானது.
அதை தொடர்ந்து ஜன. 7ம் தேதி காலை சிறப்பு தரிசனத்தில் சுவாமி ஏழுமலையானை, சவுந்தர்யா, லதா தரிசனம் செய்து, திருமண அழைப்பிதழை ஏழுமலையானின் திருப்பாதங்களில் வைத்துப் பூஜை செய்தனர். 

இதைத்தொடர்ந்து வரும் பிப்ரவரி 11ம் தேதி சவுந்தர்யா மற்றும் விசாகன் திருமணம் நடைபெறவுள்ளது. சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.