சௌவுகார் ஜானகியின் 90வது பிறந்தநாளுக்கு மகள்கள் கொடுத்திருக்கும் சர்ப்ரைஸ் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் சௌவுகார் ஜானகி. இவர் ராஜமுந்திரி ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் 15 வயதிலேயே இந்தியா ரேடியோவில் அறிவிப்பாளராக பணியாற்றி இருந்தார். அவரின் குரலைக் கேட்டு பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் திரைப்படத்தில் நடிக்க கேட்டு இருந்தார்.
ஆனால், ஜானகியின் குடும்பத்தினர் முடியாது என்று மறுத்து அவருக்கு திருமணம் செய்து விட்டார்கள். ஒரு ஆண்டில் குழந்தை, குடும்பத்தின் வறுமை என்ற நிலைக்கு தள்ளப்பட்டார் ஜானகி. பின் முதலில் பட வாய்ப்பு கேட்டு வந்த தயாரிப்பாளர் இடமே கைக்குழந்தையுடன் வாய்ப்பு கேட்டு ஜானகி சென்றிருந்தார். ஆனால், அவர் திருமணம் ஆகிவிட்டது, குழந்தை பிறந்துவிட்டது, இனி முடியாது என்று சொன்னார். இருந்தும் ஜானகியம்மாள் தன்னுடைய சூழ்நிலையைச் சொல்லி படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டார்.
சௌவுகார் ஜானகி நடித்த முதல் படம்:
அதற்கு பிறகு அந்த தயாரிப்பாளர் அவர் தம்பி எடுத்த படத்திற்கு அவரை சிபாரிசு செய்து நடிக்க வைத்தார். அந்த படம் தான் என்டிஆர் நடித்த சௌவுகார் படம். இந்த படத்தின் மூலம் தான் சவுகார்ஜானகி சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படம் 1947 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. சொல்லப்போனால் என்டிஆரின் முதல் கதாநாயகியே சவுகார்ஜானகி என்று சொல்லலாம். அதற்கு பின்பு பிரபல ஜாம்பவான்களின் படங்களில் சவுகார்ஜானகி நடித்திருக்கிறார். கருணாநிதி, ஜெயலலிதா, எம்ஜிஆர், என்டிஆர் போன்ற பல முதலமைச்சர்கள் உடனும் இவர் நடித்திருக்கிறார்.
சௌவுகார் ஜானகி திரைப்பயணம்:
அப்போதே இவர் தென்னிந்தியாவில் முன்னணி நடிகர்களான பல நடிகர்களின் படத்தில் இணைந்து நடித்திருந்தார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், சிவகுமார், ரஜினி, கமல் போன்ற எண்ணற்ற நடிகர்களுடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு. அதுமட்டும் இல்லாமல் இவர் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருக்கிறார். அன்று தொடங்கி இன்று வரை இவர் 70 ஆண்டு காலம் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
சௌவுகார் ஜானகி குறித்த தகவல்:
மேலும், திரையுலகில் தைரியமாகவும், யதார்த்தமாகவும் இருந்த நடிகைகளில் சவுகார் ஜானகியும் ஒருவர்.
திரையுலகில் தனக்கான காஸ்டியூம் செலவு, கார் பெட்ரோல், உணவு உள்ளிட்ட எல்லா செலவுகளையும் சொந்த செலவில் செய்யும் ஒரே நடிகை சவுகார் ஜானகி தான். இவருடைய திரைப்படத்திற்காக பல விருதுகளை வாங்கியிருக்கிறார். இவர் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தேசிய இந்திய திரைப்பட விருதுகள் குழுவிற்கு இரண்டு முறை நடுவராகவும், மாநில தெலுங்கு திரைப்பட விருதுகள் குழுவின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.
சௌவுகார் ஜானகி பிறந்தநாள்:
இந்நிலையில் இவருடைய பிறந்தநாள் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சௌவுகார் ஜானகிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். அவரது பேத்தி வைஷ்ணவி அரவிந்த் திரை உலகில் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சௌகார் ஜானகி தனது 90வது பிறந்தநாளை குழந்தை போல சந்தோஷமாக கொண்டாடி இருக்கிறார். இவர்களுடைய மகள்கள்,பேத்தி எல்லோரும் சேர்ந்து கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.