சற்று முன் : எஸ் பி பி யின் தற்போதைய நிலை கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட எஸ்பி சரண்

0
1692
saran
- Advertisement -

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த நிலையில் பாடகர் எஸ் பி பிக்கு திடீரென உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம்தெரிவித்து இருந்தது. அவரின் உடல்நிலையை மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

-விளம்பரம்-

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ் பி பி விரைவில் குணமடைய வேண்டும் என்று பல்வேறு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் பிராத்தனை செய்து வந்தனர். மேலும், #Prayforspb என்ற ஹேஷ் டேக்கை கூட உருவாக்கி எஸ் பி பிகாக ரசிகர்கள் தொடர்ந்து பதிவுகளை போட்டு வந்தனர். மேலும், மீண்டும் எஸ் பியின் நிலை மோசமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது.

- Advertisement -

எஸ் பி பி விரைவில் குணமடைய ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும், சினிமா பிரபலங்களும் எஸ் பி பி விரைவில் குணமடைந்து மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும், இன்று மாலை 6 மணிக்கு எஸ் பி பிக்காக அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நடிகர், நடிகைகள் பலரும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தனது தந்தையின் நிலை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் எஸ்பிபியின் மகனான சரண். அந்த வீடியோவில் பேசியுள்ள அவர், எஸ்பிபியின் உடல்நிலை நேற்று இருந்தது போல மோசமாகத்தான் இருந்து வருகிறது என்றும், அவரது உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்றும் கூறியிருக்கிறார் . மேலும் தங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்குமே நன்றி கடவுளுக்கு கண்டிப்பாக மனசாட்சி இருக்கிறது விரைவில் அவர் குணம் அடைந்து வருவார்கள்.உங்கள் பிரார்த்தனைகளால் எங்கள் குடும்பம் தற்போது தைரியமாக இருக்கிறது என்று கண்ணீர் மல்க பேசியிருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement