இரண்டு வாரத்திற்கு பின்னர் தந்தையை சந்தித்தேன், இப்படி தான் பேசினார் – வீடியோ வெளியிட்ட சரண்.

0
1055
spb
- Advertisement -

பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான எஸ் பி பி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளதாக இன்று சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவியது. பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

-விளம்பரம்-
spb

பாடகர் எஸ் பி பிக்கு திடீரென உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம்தெரிவித்து இருந்தது. அவரின் உடல்நிலையை மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து அவரது நிலை நாளுக்கு நாள் மோசமானது.

- Advertisement -

சமீபத்தில் எஸ் பி அபாய கட்டத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டதாகவும் இருப்பினும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாடகர் எஸ் பி பி கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதாக பி ஆர் ஓ நிகில் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். எஸ்பிபி கொரோனாவில் இருந்து மீண்டு விட்டார் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் பரவியவுடன் எஸ்பிபி சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில்என் தந்தை கொரோனாவில் இருந்து மீண்டு வந்து விட்டதாக பிஆர்ஓ நிகில் தெரிவித்திருந்தார் அது குறித்து என்னிடம் பேசினார் எப்படி இப்படி ஒரு விஷயம் அவருக்கு சென்றடைந்தது என்பது தெரியவில்லை. தந்தைக்கு கொரோனா சரியாகி விட்டதா இல்லையா என்பதை விட அவர் முன்பை போலவே தான் தற்போதும் இருக்கிறார் இரண்டு வாரங்களுக்கு பின்னர் நான் என் தந்தையை சந்தித்து பேசினேன். அவர் என்னுடைய நலம் குறித்தும் என் குடும்பத்தில் உள்ளவர்கள் நலம் குறித்து விசாரித்தார் நானும் அனைத்தையும் சொன்னேன்.

-விளம்பரம்-
View this post on Instagram

#SPB health update. I met dad.

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on

அதேபோல உங்களுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னேன் அவர் என்னிடம் சைகை மூலம் தம்ஸ் அப் காட்டினார். மேலும் நான் பேசிய அனைத்திற்கும் சைகை மூலம் தான் பதில் அளித்தார் .மேலும், நீங்கள் அனைவரும் அனுப்பிய அனைத்து பிரசாதங்களையும் அவருக்கு அருகில் தான் வைத்திருக்கிறேன். கண்டிப்பாக விரைவில் அவர் குணமடைந்து வருவார். எனது தந்தையின் சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்து வரும் மருத்துவமனைக்கும் மருத்துவர்களுக்கும் மிக்க நன்றி என்று கூறியுள்ளார்.

Advertisement