சுயநினைவிற்கு திரும்பிய எஸ் பி பி. தனது கைப்படையாக எழுதிய அந்த 3 வார்த்தை. புகைப்படத்துடன் இதோ.

0
3381
spb
- Advertisement -

பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான எஸ் பி பி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் கொரோனாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளதாக சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

-விளம்பரம்-

பாடகர் எஸ் பி பிக்கு திடீரென உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம்தெரிவித்து இருந்தது. அவரின் உடல்நிலையை மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து அவரது நிலை நாளுக்கு நாள் மோசமானது.

- Advertisement -

சமீபத்தில் எஸ் பி அபாய கட்டத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டதாகவும் இருப்பினும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது தந்தையை சந்தித்தாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், இரண்டு வாரங்களுக்கு பின்னர் நான் என் தந்தையை சந்தித்து பேசினேன். மேலும் நான் பேசிய அனைத்திற்கும் சைகை மூலம் தான் பதில் அளித்தார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் பாடகர் எஸ் பி பி சுயநினைவு திரும்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், சுய நிலை திரும்பிய எஸ் பி பி தனது கைப்படையில் Love You All என்று எழுதி தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். விரைவில் எஸ் பி பி பூரண குணமடைவார் என்று மேலும் பிரார்த்தனை செய்யோம்.

-விளம்பரம்-
Advertisement