பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த நிலையில் பாடகர் எஸ் பி பிக்கு திடீரென உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம்தெரிவித்து இருந்தது. அவரின் உடல்நிலையை மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ் பி பி விரைவில் குணமடைய வேண்டும் என்று பல்வேறு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் பிராத்தனை செய்து வந்தனர். மேலும், #Prayforspb என்ற ஹேஷ் டேக்கை கூட உருவாக்கி எஸ் பி பிகாக ரசிகர்கள் தொடர்ந்து பதிவுகளை போட்டு வந்தனர். இந்த நிலையில் எஸ் பி பி இறந்துவிட்டதாக போலியான செய்தி ஒன்று வெளியானது.
இதனால் அதிர்ச்சியடைந்த எஸ் பி பியின் மகனும் நடிகருமான எஸ் பி சரண், இது முற்றிலும் தவறான செய்தி. தனது தந்தைக்கு சிகிச்சை அளிப்பட்டு வருவது உண்மை தான். ஆனால், அவர் நலமாக இருக்கிறார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். . இதையடுத்து போலியான செய்திகள் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் எஸ் பி சரண் தனது தந்தையின் நிலை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசியுள்ள எஸ் பி பி, நேற்று அப்பாவிற்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அவரது நிலை குறித்து எனக்கு பல கால்கள் வந்துகொண்டு இருக்கிறது. என்னால் அதற்கு பதில் அளிக்க முடியவில்லை. அதனால் இந்த வீடியோ மூலம் சொல்ல விரும்புகிறேன். இதை தயவு செய்து வாட்ஸ் அப்பில் அனைவருக்கும் பகிருங்கள். அப்பா தற்போது நலமாக இருக்கிறார். அவருடைய இருதயம், நுரையீரல் எல்லாம் நேற்றை விட சீராக இருக்கிறது என்று கூறியுள்ளார்.