மன்னிப்பு கேட்க வேண்டும் – இசையமைப்பாளருக்கு எஸ்.பி.பி. மகன் நோட்டீஸ். என்ன காரணம்?

0
149
- Advertisement -

பிரபல இசையமைப்பாளருக்கு எஸ்பிபியின் மகன் சரண் நோட்டீஸ் அனுப்பி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே தொழில்நுட்பம் வளர்வதன் மூலம் நிறைய விளைவுகளும் ஏற்படுகிறது. அந்த வகையில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பல பேருடைய வாழ்க்கையும் சீரழித்து வருகிறார்கள். அதில் அதிகம் பெண்கள் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பெண்களின் புகைப்படத்தை மாபிங்க் செய்து அதை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் அரைகுறை ஆடையுடன் லிப்டில் ராஸ்மிகா நுழைவது போன்று ஒரு வீடியோ வெளியானது. இதுகுறித்து பலருமே பலவிதமான கமெண்ட்களை போட்டிருந்தார்கள். ஆனால், உண்மையில் அந்த வீடியோவில் இருந்தது ராஷ்மிகா கிடையாது. அதேபோல் கஜோல் போன்ற பல நடிகைகளின் டீப் பேக் வீடியோக்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து புகார் அளித்து இருந்தார்கள்.

- Advertisement -

ஏ ஐ தொழில்நுட்பம் பயன்:

இன்னொரு பக்கம், இந்த ஏ ஐ தொழில்நுட்பம் மூலம் மக்கள் நெகிழ்ச்சி அடையக்கூடிய விஷயங்களும் நடைபெற்று வருகிறது. அதாவது, மறைந்த பாடகர்களின் குரல்களை இந்த ஏ ஐ தொழில்நுட்பம் மூலம் மீண்டும் மக்கள் மத்தியில் ஒலிக்க செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஏ ஆர் ரகுமான் அவர்கள் சமீபத்தில் வெளிவந்த ரஜினியின் லால் சலாம் படத்தில் மறைந்த பின்னணி பாடகர்களான ஷாகுல் சமித், பம்பா பாக்கியா ஆகியவருடைய குரல்களை திமிறி எழுடா என்ற பாடலில் பயன்படுத்தியிருந்தார்.

ஏ ஆர் ரகுமான் பேட்டி:

அது மட்டும் இல்லாமல் இவர்களுடைய குரல்களை பயன்படுத்தியதற்கு அவர்களின் குடும்பத்தாரிடம் முறையாக அனுமதி பெற்று அதற்கு தகுந்த சன்மானமும் கொடுத்திருப்பதாக ஏ ஆர் ரகுமான் பேட்டியில் கூறியிருந்தார். இந்த நிலையில் எஸ்பிபியின் குரலை பயன்படுத்தியதற்கு அவர் மகன் சரண் கூறி இருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

விவேக் சாகர் மீது குற்றச்சாட்டு:

அதாவது, ஏ ஐ தொழில் நுட்பத்தின் மூலம் மறைந்த பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடைய குரலை கிடா கோலா என்ற பாடலில் தெலுங்கு இசையமைப்பாளர் விவேக் சாகர் பயன்படுத்தி இருக்கிறார். இதை அவர் பேட்டியிலும் ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், எஸ்பிபி உடைய குரலை பயன்படுத்த அவருடைய குடும்பத்தாரிடம் முறையாக அனுமதி வாங்கவில்லை. இதனால் எஸ்பிபி யின் மகன் எஸ்பி சரண் அவர்கள் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

சரண் அனுப்பிய நோட்டீஸ்:

அதில் அவர், எந்தவொரு தொழில்நுட்பமும் மனித குலத்திற்கு பயனளிக்க வேண்டுமே தவிர வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடாது. அவரது குரல் இந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால், இது எங்களிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படுவது வேதனையான விஷயம். முறையான அனுமதி பெறாமல் எனது தந்தையின் குரலைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். நஷ்ட ஈடு மற்றும் ராயல்டியில் பங்கு வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement