சின்மயியால் புதிய பஞ்சாயத்தில் சிக்கிய லோகேஷ் கனகராஜ் – எப்படி எதிர்கொள்ள போகிறார் இதை?

0
168
- Advertisement -

லியோ படத்தில் சின்மயிக்கு டப்பிங் வாய்ப்பு கொடுத்தது லோகேஷ் கனகராஜ் செய்த தவறு என்று டப்பிங் யூனியனை சேர்ந்த ராஜேந்திரன் கூறி இருக்கிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து இருந்தார். இந்த படத்தில் சின்மயி, திரிஷாவிற்கு டப்பிங் கொடுத்து இருந்தார். ஏற்கனவே டப்பிங் யூனியன் சின்மயிக்கு தடை விதித்து இருந்தது. ஆனால், அதையும் மீறி லோகேஷ் கனகராஜ் சின்மயிக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக டப்பிங் யூனியனை சேர்ந்த ராஜேந்திரன் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் ‘ சின்மயி ஒரு சாதாரண உறுப்பினராக தான் சேர்ந்தார். சந்தா புதுப்பிக்க சொன்னபோது, நான் லைஃப் மெம்பர். சந்தா புதுப்பிக்க தேவையில்லை என்று சொன்னார். அவர் சந்தா செலுத்தாததால் உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதனால் இந்த விவகாரம் கோர்ட் வரைக்கும் போனது. நீதிமன்றமும் சங்க நடவடிக்கை சரி என்று தீர்ப்பும் தந்தது.

- Advertisement -

ஆனால், சின்மயி சொன்ன ஒரு பொய்யால் யூனியன் நடத்திய இந்த வழக்கில் சில லட்சங்கள் செலவானது தான் மிச்சம்.அவர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை. ஆனால், அவரை டப்பிங் யூனியனில் பயன்படுத்தியது தவறு. லோகேஷ் கனகராஜ், யூனியன் கினியன் அதெல்லாம் விடுங்க. நீங்க பேசுங்க பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி அவரைப் பேச வைத்திருக்கிறார். கோட்டு தீர்ப்பு வந்த பிறகு சின்மயி திரும்ப உறுப்பினராக சேர்ந்து இருக்கலாம்.

அதையும் அவர் பண்ணவில்லை. லோகேஷ் கனகராஜ் செய்தது ரொம்ப தவறு என்றெல்லாம் பேசி இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க லியோ படத்தில் சின்மயிக்கு வாய்ப்பு கொடுத்தது குறித்து கூறிய லோகேஷ் கனகராஜ் ‘ என்னுடைய திரைப்படங்களில் நிறைய காதல் ரொமேன்ஸ் காட்சிகள் இருக்காது ஏனென்றால் எனக்கு அது எழுதவும் வராது. ஆனால் லியோ திரைப்படத்தில் நான் கொஞ்சம் நன்றாகவே ரொமான்ஸ் காட்சிகளை எழுதி உள்ளேன் என்று எனக்கு தோன்றுகிறது.

-விளம்பரம்-

அதற்கு உயிர் அளிக்கும் வகையில் விஜய், திரிஷா நடித்த ரொமான்ஸ் காட்சிகள் நன்றாக வந்திருக்கின்றது. அந்தக் காட்சிகளுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக சின்மயியை வைத்து டப்பிங் செய்ய முடிவு செய்தோம்.மேலும் கூறியவர் அவங்களுக்கு தடை விதிக்கப்பட்டது எல்லாம் பற்றி கவலைப்படவில்லை. எனக்கு என்னுடைய வேலை முடிய வேண்டும் அதற்காக அவர்களை அழைத்துப் பேச வைத்தேன்.

அவர் தன்னுடைய குரலால் த்ரிஷாவின் கேரக்டர் உயிர் கொடுத்துவிட்டார். எல்லா மொழிகளிலும் த்ரிஷாவிற்கு சின்மயி டப்பிங் செய்து உள்ளார் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே லியோ படத்தில் தனக்கு டப்பிங் வாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகிராஜுக்கு சின்மயி நன்றி தெரிவித்து பதிவு ஒன்றையும் போட்டு இருந்தார் என்பதும் குறிப்பித்தக்கது. இப்படி ஒரு நிலையில் தடையை மீறி சின்மயிக்கு வாய்ப்பு கொடுத்ததால் டப்பிங் யூனியனின் விரோதத்தை சம்பாதித்து இருக்கும் லோகேஷ் அதை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement