அந்த சிகிச்சை பற்றி அப்போது வெளியில் சொல்லாததற்க்கு காரணம் இதான் – சரண் விளக்கம்.

0
1228
spb
- Advertisement -

பிரபல பின்னணி பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் காலமான சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 51 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த  எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த வெள்ளிக்கிழமை , செப்டம்பர் 25 பிற்பகல் மரணம் அடைந்தார். எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகத்தினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியது.

-விளம்பரம்-

ஸ் பி பியின் மறைவிற்கு நாட்டின் பிரதமர் துவங்கி பாலிவுட், டோலிவுட் வரை இருக்கும் பல்வேறு பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். மேலும், பல்வேறு தமிழ் நடிகர், நடிகைகளும் எஸ் பி பியின் உடலுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். அதே போல எஸ் பியின் மறைவிற்கு நடிகர் விஜய் கூட நேரில் சென்று தனது இரங்கலை தெரிவித்து இருந்தார்.இதை தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 26) எஸ் பி பியின் உடல் 72 குண்டுகள் முழங்க அவரது சொன்ன கிராமத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

- Advertisement -

எஸ் பி மருத்துவமனையில் இருந்த போது புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. இந்நிலையில் எஸ்.பி.பிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் மருத்துவக்கட்டணம் குறித்து வெளியான வதந்திக்கு அவரது மகன், தனியார் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அப்போது எஸ்.பி.பிக்கு டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டதை வெளியே சொல்லாததற்கான காரணம் குறித்து எஸ்.பி.பி.சரண் கூறுகையில்,  இந்த சிகிச்சை செய்யப்பட்டதாக சொன்னால் இனி அவரால் பாட முடியாதா என்று மக்களிடம் அச்சம் வரும் அதனால் வெளியே சொல்லவில்லை கூறினார். டிரக்யாஸ்டமி சிகிச்சை தொண்டை பகுதியில் செய்யும் சிகிச்சை. இதனால் எஸ்.பி.பியால் தற்காலிகமாக பேசமுடியாமல் போகலாம். அதனால் வெளியே சொல்ல வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர் என்று மருத்துவர்கள் அறிவித்தனர்.

அதே போல எஸ் பி பி சிகிச்சைக்கு எம்.ஜி.எம் மருத்துவமனை அதிகப்படியான பில் போடப்பட்டதாகவும், இதனைக் கட்டுவதற்கு எஸ்பிபி குடும்பத்தினரால் முடியாத சூழல் ஏற்பட்டது என்றும், பின்பு எஸ்பிபியின் மகன் குடியரசுத் துணைத் தலைவரை அணுகிய பிறகே, மருத்துவமனை நிர்வாகம் எஸ்பிபியின் உடலைக் கொடுத்தது என்று செய்திகளைப் பரப்பினார்கள். இதற்கு விளக்கமளித்த சரண், இவை அனைத்தும் சுத்த அபத்தங்கள் என்றும் கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement