Home பொழுதுபோக்கு சமீபத்திய

spb மகனை தெரியும் அவரது மகளை தெரியுமா ? தனது தந்தைக்காக முதல் முறையாக சூப்பர் சிங்கர் மேடைக்கு வந்த SPB மகள்

0
1545
-விளம்பரம்-

இந்திய நாட்டின் மிகச் சிறந்த பின்னணி பாடகரும், நடிகராகவும் திகழ்ந்தவர் எஸ்பிபி பாலசுப்ரமணியன். இவர் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர். பாடகர் எஸ்பிபி கடந்த 2020ஆம் ஆண்டு கொரானா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25 ஆம் தேதி காலமானார். இவருடைய இழப்பு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் சிவாஜி துவங்கி தற்போதுள்ள விஜய், அஜித் வரை அணைத்து முன்னனி ஹீரோக்களுக்கு பின்னணி பாடலை பாடியவர் எஸ் பிபாலசுப்ரமணியம் . 

-விளம்பரம்-

நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதுகளையும் பெற்றவர். கடைசியாக இவர் ரஜினி நடித்த பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடலையும் பாடியவர். இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோன தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

SPB மறைவு :

கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்ட போதும் அவருக்கு ஏற்பட்ட உடல் நிலை கோளாறு காரணமாக நேற்று மதியம் 1.04 மணி அளவில் அவர் உயிரிழந்தாக குழுவினர் அறிவித்து இருந்தனர். இதை தொடர்ந்து இன்று (செப்டம்பர் 26) எஸ் பி பியின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் உள்ள அவரது நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரின் இழப்பு பேரிழப்பாக இருந்தாலும் இன்றும் அவர் பாடிய பாடல் வழியாக ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகிறார்.

சூப்பர் சிங்கரில் SPB :

-விளம்பரம்-

இந்நிலையில் எஸ் பி பி மறைவதற்கு முன்னர் தன்னுடைய கடைசி காலங்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி நடுவராக எஸ் பி பி கலந்து கொண்ட போது தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான நிகழ்வுகளையும், பாடல்கள் எவ்வாறு உருவாகின்றன, பாடல்கள் எவ்வாறு பாடப்படுகின்றன, மேலும் இளையராஜாவுடன் தனக்கு இருந்த நெருக்கமான நடப்பு போன்றவற்றை அவ்வப்போது பகிர்ந்து கொள்வார்.

-விளம்பரம்-

SPB குடும்பம் :

இந்நிலையில் பாடகர் எஸ் பிபி சாவித்திரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு எஸ் பிபி சரண் மற்றும் எஸ் பிபி பல்லவி என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் எஸ் பிபி சரண் ஏற்கனவே பலவிதமான பாடல்களை பாடியிருக்கிறார் அதோடு தற்போது சூப்பர் சிங்கர் நடுவராக இருந்து வருகிறார். இப்படி பட்ட நிலையில் தான் எஸ் பிபி சரண் தன்னுடைய தங்கையான எஸ் பிபி பல்லவியை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வரவழைத்துள்ளார்.

தந்தைக்காக பாடிய எஸ் பிபி மகள் :

இப்படிபட்ட நிலையில் தான் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட எஸ் பி பி மக்கள் பல்லவி தன்னுடைய தந்தை பற்றிய ஒரு பாடலை நிகழ்ச்சில் பாடியுள்ளார். இதனை பற்றிய ஒரு ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எஸ் பி பியின் மக்கள் பல்லவி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news