மோடியை சந்திக்க சென்ற எஸ் பி பிக்கு நேர்ந்த அவமானம்.

0
9457
Spb-Modi
- Advertisement -

இந்திய பிரதமரான மோடி தமிழகத்தில் மட்டும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். ஆனால், சமீபத்தில் மோடியை சந்திக்க சென்ற பிரபல எஸ் பி பிக்கு தர்ம சங்கடமான நிலை நேர்ந்துள்ளது. மோடி இதுவரை இரண்டு முறை பாரத பிரதமராக தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார். 2014 ஆம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான மோடி, இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று இரண்டாம் முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கபட்டார். சமீபத்தில் மோடி பாலிவுட் நச்சரங்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தனர்.

-விளம்பரம்-
Image

இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான், அமீர்கான்,கங்கனா உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்களை மட்டும் அழைத்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதோடு பிரதமர் மோடியுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியானது.இது குறித்து பார்க்கையில் இந்த நிகழ்ச்சி சினிமா நட்சத்திரங்கள் சம்பந்தமான சந்திப்பு நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

இதையும் பாருங்க : சந்திரலேகா சீரியல் நடிகையா சினிமாவில் இப்படியெல்லாம் நடித்துள்ளார். பார்த்தா ஷாக் ஆவீங்க.

- Advertisement -

பிரதமர் மோடி எப்பவுமே தமிழை தூக்க வேண்டும் என்ற நோக்கில்தான் பல செயல்களை செய்து வருகிறார். அது நீட்தேர்வு, ஆன்லைன் முறை பதிவு, இந்தி திணிப்பு என்று எல்லாருக்கும் தெரிந்ததுதான். இப்போது சினிமா சம்பந்தமான நிகழ்ச்சியில் கூட தமிழ், தெலுங்கு என தென்னிந்திய துறையில் உள்ள பிரபலமான நடிகர்களை கூட அழைக்கவில்லை. இது ரொம்ப வருத்தத்துக்குரிய விஷயம் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இதே விழாவில் பிரபல தமிழ் பாடகரான எஸ் பி பி கலந்து கொண்டு இருந்திருக்கிறார்.

ஆனால், மோடி, எஸ் பி பியுடன் எடுத்துக்கொண்ட எந்த ஒரு புகைப்படமும் சமூக வலைதளத்தில் வெளியாகவில்லை. இந்த நிலையில் எஸ் பி பி தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், ராமோஜி ராவ்ஜி நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அவரால்தான் மோடி கலந்து கொண்ட ரிசப்ஷனில் கலந்து கொள்ள முடிந்தது. கடந்த 29ஆம் தேதி அக்டோபர் மாதம் இந்த நிகழ்ச்சியில் நாங்கள் கலந்து கொண்ட போது அங்கே இருந்த பாதுகாவலர்கள் எங்களுடைய செல்போன்களை அங்கேயே வைத்து விட்டு செல்லுமாறு கூறினார்கள். மேலும், அதற்கான டோக்கன்களையும் எங்களுக்கு வழங்கினார்கள். ஆனால், உள்ளே சில நட்சத்திரங்கள் பிரதமருடன் செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

எஸ் பி பியின் இந்த பதிவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது, பாலிவுட் சினிமாவிலும் பல ஆண்டுகளாக முக்கிய பாடகராக இருந்து வரும் எஸ் பி பியை இவ்வாறு செய்துள்ளது தற்போது பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டுள்ளது.

Advertisement