விஜய்யின் அடுத்த படம் குறித்து வெளிவந்த ஸ்பெஷல் தகவல்!

0
2592
Actor Vijay

ஏ.ஆர். முருகதாஸ், விஜய் கூட்டணியில் அடுத்து உருவாக இருக்கும் படம் தளபதி 62.இப்படத்தின் பணிகளை ஆரம்பிக்க தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.இதர்கிடையில் ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டியில் இப்படத்தை பற்றிய சிறு தகவலை கூறியுள்ளார்.
murugadoss - vijay
அப்பேட்டியில் அவர் கூறியது!

இந்த படம் எமோஷ்னல் கலந்த ஒரு மாஸ் ஆக்ஸன் படமாக இருக்கும், விஜய்யை ஒரு வித்தியாசமான பரிமாணத்தில் காட்ட விரும்புகிறேன். அதற்கான தீவிர வேலைகளில் தற்போது இறங்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ், விஜய் கூட்டணியில் துப்பாக்கி, கத்தி என மெகா ஹிட் படங்கள் வந்துவிட்டது. தற்போது மூன்றாவது முறையாக இருவரும் இணைய இருக்கின்றனர். இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.
மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியானதும் இப்படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து விஜய் தொடங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது