78 வயதில் இப்படி ஒரு குற்றச்சாட்டில் சிக்கிய ஸ்க்விட் கேம் தாத்தா – அவர் சொன்ன பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி.

0
373
squid game
- Advertisement -

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான ஸ்க்விட் கேம் நிகழ்ச்சி உலக வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேப்பை பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியை பிரபல கொரிய இயக்குனர்
ஹ்வாங் டோங்-ஹ்யுக் இயக்கியிருந்தார். இந்த நிகழ்ச்சியானது ஒரு போட்டியைச் மையமாக வைத்து உருவாக்கப்பட்டது, 456 வீரர்கள் கலந்து கொள்ளும் அந்த போட்டியில் அவர்கள் அனைவரும் ஆழ்ந்த நிதி நெருக்கடியில் உள்ளனர். இவர்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு 45.6 பில்லியன் ‘கொரிய வான்’ வழங்கப்படும் அது அமெரிக்க டாலரில் 35 மில்லியன் ஆகும். ஆனால் இங்கே தான் பெரிய ட்விட்ஸ் இருக்கிறது போட்டியில் கலந்து கொள்ளும் இவர்கள் குழந்தைகள் விளையாடும் விளையாட்டை விளையாட வேண்டும் ஆனால் அதில் தோலிவியடைந்தால் உயிரிழக்க நேரிடும்.

-விளம்பரம்-

சிறந்த துணை நடிகர் :

இப்படி சுவாரஷ்யமான கதையா கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஸ்க்விட் கேம் தொடரானது உலகமக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. அதோடு உலகலகில் இந்த நிகழ்ச்சி ஒரு எபிசோடுக்கு 2லிருந்து3 மில்லியன் டாலர்களை வசூலித்து ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தது. இப்படி ஹிட்டான நிகழ்ச்சியில் சிறந்த துணை கதாபாத்திரமாக நடித்தவர் தான் ஓ யோங் சு. இவர் இந்நிகழ்ச்சியில் சிறந்த துணை நடிகருக்கான குளோப் விருதை பெற்றிருந்தார். இந்நிலையில் இவர் மீது கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு போடப்பட்டது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

பாலியல் குற்றச்சாட்டு :

78 வயதான ஓ யோங் சு மீது கொரிய பெண் ஒருவர் கடந்த 2017ஆம் ஆண்டு தன்னை தகாதவாறு தொட்டதாக தென் கொரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் ஓ யோங் சு மீது எந்த விசாரணையும் இல்லாமல் அந்த வழக்கனது இந்த ஆண்டு நிறைவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஓ யோங் சு மீது குற்றம் சாட்டிய பெண் கோரிக்கையின் பேரில் மீண்டும் இந்த வழக்கனது விசாரணைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மன்னிப்பு கேட்ட ஓ யோங்-சு:

இந்த விசாரணையில் பேசிய ஓ யோங்-சு நான் அந்த பெண்ணை ஏரியை சுற்றிக்காட்டத்தான் கைகளை தொட்டேன் என்று விசாரணையில் கூறியிருந்தார். மேலும் அதற்கு பிறகு செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர் நான் அந்த பெண்ணிடம் ஏற்கனவே மன்னிப்பு கேட்டு விட்டேன் அதற்காக நான் குற்றம் செய்தவனாக ஆகாது என்றார். இந்நிலையில் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஓ யோங்-சு நடித்த விளம்பரங்களை கொரிய சியோல் கலாச்சர அமைப்பு தடை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

இந்த வயதில் இது தேவையா:

ஸ்க்விட் கேமில் இவரது நடிப்பு மிகவும் ரசிகர்களால் கவரப்பட்டது மேலும் நிகழ்ச்சியில் இறுதியில் இவர் யார் எனத் தெரியும் போது இத் தொடரை பார்க்கு பார்வையாளர்க்ளுக்கு ட்விஸ்ட் கொடுக்கும் படி அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் 1944ஆம் ஆண்டு பிறந்த ஓ யோங்-சுவிற்கு தற்போது 78வயது ஆகிறது. இப்படியிருக்கும் போது இவர் பாலியல் வழக்கில் சிக்கியிருப்பதினால் இந்த வயதில் இது தேவையா என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றார். மேலும் ஓ யோங்-சு மீது தொடரப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு பற்றிய தகவல்களானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement