காத்து வாக்குல ரெண்டு காதல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இந்திய கிரிக்கெட் வீரர் (ஹர்பஜனுக்கு போட்டியா வராரோ)

0
614
Sreeshanth
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். இவர் சிலம்பரசன், தனுஷ், அனிருத் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் அதிகமாக பணியாற்றி இருக்கிறார். தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளர்கள்.

-விளம்பரம்-

Vjs சமந்தா நயன்தாரா :

இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து உள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் இயக்குனர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவின் கூட்டணியில் இரண்டாவது படமாகும். இவர்களது கூட்டணியில் உருவான முதல் திரைப்படமான நானும் ரவுடி தான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அளித்தது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது.

- Advertisement -

KVRK படத்தில் கிரிக்கெட் வீரர் :

தற்போது இந்த படத்திற்கான டப்பிங், post-production போன்ற இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கூடிய விரைவில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் நடித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அவர் வேறு யாருமில்லை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். இவர் கேரளாவைச் சார்ந்தவர்.

ஸ்ரீஷாந்தின் கதாபாத்திரம் என்ன :

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது, ஆமாம், விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்கில் இரண்டு காதல் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்.இப்போதைக்கு என்னால் அதிகம் சொல்ல முடியாது. படம் வந்த பிறகு பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

சன்னி லியோனும் ஸ்ரீசாந்தும் :

இதன் மூலம் இவர் இந்த படத்தில் நடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இவர் இந்த படம் மட்டும் இல்லாமல் தமிழில் இன்னொரு படத்திலும் நடித்திருக்கிறார். அதேபோல் ஹிந்தியிலும் சன்னி லியோன் உடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.கன்னட படமொன்றிலும் நடிக்க இருப்பதாக பேச்சுவார்த்தை கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஹர்பனுஜுக்கு போட்டியா :

இப்படி கிரிக்கெட்டில் ஒரு ரவுண்ட் கலக்கிய ஸ்ரீசாந்த் தற்போது சினிமா உலகிலும் ஒரு ரவுண்ட் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஸ்ரீஷாந்திற்கும் ஹர்பஜனுக்கும் Ipl போட்டியின் போது ஏற்பட்ட மோதல் அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே ஹர்பஜன் பிரண்ஷிப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ip போட்டிகளில் இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீஷாந்துக்கு வாழ்நாள் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement