ஜெகன் மோகன் ரெட்டி தோற்றால் கடற்கரையில் அப்படி நடப்பதாக சொன்ன ஸ்ரீரெட்டி – தற்போதும் விட்ட சவால்

0
280
- Advertisement -

ஆடை இல்லாமல் கடற்கரையில் நடப்பேன் என்று நடிகர் ஸ்ரீரெட்டி விட்டு இருக்கும் சவால் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு சினிமா உலகில் பிரபலமான முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ஸ்ரீ ரெட்டி.

-விளம்பரம்-

பின் இவர் பட வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி படுக்கையை பகிர்ந்து கொண்டதாக பல நடிகர்கள் மீது குற்றச்சாட்டை எழுப்பி இருந்தார். தெலுங்கு நடிகர் மட்டுமல்லாது தமிழில் ஸ்ரீகாந்த், ராலன்ஸ் துவங்கி இயக்குனர் முருகதாஸ் வரை என பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை சாட்டி இருந்தார். மேலும், அதற்காக “ரெட்டி லீக்ஸ்” என்ற போராட்டம் ஒன்றையும் உருவாக்கி இருந்தார்.

- Advertisement -

ஸ்ரீரெட்டி குறித்த சர்ச்சை:

அதுமட்டுமில்லாமல் இந்த போராட்டத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பல ஸ்ரீரெட்டி இடம் பகிர்ந்து இருந்தார்கள். இந்த நடவடிக்கையால் ஆந்திராவில் நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இவர் சென்னையில் குடியேறினார். அதன் பின் இவர் தமிழ் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. தமிழ் சினிமாவிலும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் பெயரை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார்.

ஸ்ரீரெட்டி லீக்ஸ்:

சமீப காலமாக தான் எந்த சர்ச்சையையும் கிளப்பாமல் இருந்தார் அம்மணி. அதோடு அம்மணி பண்ண அலம்பலுக்கு தெலுங்கு சினிமா பக்கம் தலை வைத்து படுக்க முடியாது. இருப்பினும் இவர் தெலுங்கு சினிமா பற்றி அடிக்கடி எதாவது பதிவிட்டு தான் வருகிறார். அந்த வகையில் இவர் பவன் கல்யாணத்துக்கு எதிராக பல சர்ச்சை கருத்துக்களை கூறி வந்தார். இதனால் பவன் கல்யாண் ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை கடுமையாக கண்டித்தும் விமர்சித்தும் இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஸ்ரீரெட்டி குறித்த செய்தி:

இப்படி இருக்கும் நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் ஜெகன்மோகன் கட்சி தோல்வி பெற்றால் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடை இல்லாமல் நடப்பேன் என்று நடிகை ஸ்ரீரெட்டி சொன்னதாக சோசியல் மீடியாவில் தகவல் பரவி வந்திருந்தது. அதற்கு ஏற்ப தேர்தலில் ஜெகன்மோகன் கட்சி தோல்வி அடைந்தது. இதனால், எப்போது நீங்கள் ஆடை இல்லாமல் நடக்கப் போகிறீர்கள்? என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கேட்டிருக்கிறார்கள்.

ஸ்ரீரெட்டி கொடுத்த பதிலடி:

இதற்கு ஸ்ரீரெட்டி, நான் ஆடை இல்லாமல் நடப்பேன் என்று எப்போதுமே சொல்லவில்லை. நான் அப்படி சொன்னேன் என்று ஆதாரம் இருந்தால் காண்பியுங்கள். நான் என்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து எதையும் நீக்கவும் இல்லை. ஒருவேளை நான் அப்படி சொன்னேன் என்று நீங்கள் நிரூபித்தால் கண்டிப்பாக விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடை இல்லாமல் நடப்பேன். உங்களுடைய கேலிக்கும் கிண்டலுக்கும் பயப்படமாட்டேன். உங்களை துணிச்சலாக எதிர்கொள்வேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement