ஸ்ரீதேவி இறப்பதற்கு முன்னர் ஜான்விவை 'தடாக்' என்ற படத்தில் நடிக்க அனுமதித்தார். ஆனால், படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களில் எதிர்பாராத விதமாக ஸ்ரீதேவி இயற்கை எய்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜான்வி படப்பிடிப்ற்கு சில வாரங்கள் செல்லவில்லை.
பின்னர் துயரத்தில் இருந்த மீண்ட ஜான்வி தற்போது மீண்டும் படப்பிடிப்பற்கு சென்றுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பில் தன் அம்மா ஸ்ரீதேவி, இங்கிலீஷ் விங்கிலிஷ் படத்தில் அணிந்த சீலையை அணிந்து நடித்துள்ளார்.
தன் அம்மாவின் நியாபகமாக பல பொருட்களை சேமித்து வைத்துள்ளார் ஜான்வி. அந்த சேமிப்புகளில் இந்த சீலையும் அடக்கம். தன் அம்மாவின் நியாபகமாக, இந்த சீலையை தன் முதல் படத்தில் அணிந்து நடித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் ஜான்வி.




