ஸ்ரீதேவி மரணத்திற்கு துபாய் ஹோட்டல் காரணமா ? விசாரணையில் அதிர்ச்சி தகவல் !

0
2093
actress sri devi

துபாயில் நடந்த தனது உறவினரின் திருமணத்திற்கு சென்ற ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.ஸ்ரீதேவியின் இந்த தீடீர் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த நிலையில் துபாய் பத்திரிகைகள் சில ஸ்ரீதேவியின் மரணத்திற்கு அவர் தங்கியிருந்த ஹோட்டலே காரணம் என்று திடிக்கிடும் செய்திகளை பரப்பிவருகிறது.

Sridevi

துபாய் பிரபல பத்திரிகை ஒன்றில் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு அவர் தங்கியிருந்த ஹோட்டலில் கொடுக்கப்பட்ட உணவில் விஷம் கலந்த அவருக்கு கொடுக்கப்பட்டதால் தான் அவர் மரணமடைந்துவிட்டார் என்றும், நடிகை ஸ்ரீதேவி எப்போதும் தமது உடல் ஆரோக்யத்திற்காக யோகா , உடற்பயிற்சிகளை செய்வபவர், அதனால் தான் அவர் தனது 50 வயதில் கூட ஆரோக்யமாக வாழ்ந்து வந்தார் அப்படி இருந்த அவருக்கு தீடீர் என்று மாரடைப்பு வர வாய்ப்பே இல்லை என்றும்,அவர் இறக்கப்பத்திற்கான காரணம் ஹோட்டலில் அவர் உண்ண உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டது தான் காரணம் என்று வதந்திகள் பரவி வருகின்றன.

ஆனால் அவர் தங்கியிருந்த ஹோட்டல் தரப்பில் கூறுகையில் நடிகை ஸ்ரீதேவி இறந்த அன்று அவர் தனியாகத்தான் ரூமில் தங்கி இருந்தார் இரவு 10 மணி அளவில் ஹோட்டல் ரூம் பாயிடம் குடிக்க தண்ணீரை தனது ரூமிற்கு கொண்டு வருமாறு கேட்டுள்ளார். ரூம் பாயும் 15 நிமிடங்களில் அவரது ரூமிற்கு தண்ணீரை கொண்டு சென்றுவிட்டார்.ஆனால் நீண்ட நேரம் காலிங் பெல்லை அழைத்தும் ஸ்ரீதேவியின் ரூம் கதவு திரக்கப்படாததால், அவர் அவசர குழுவை அழைத்தார்.பின்னர் அவர்கள் வந்து ரூம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தால் பாத்ரூமில் மயங்கிய நிலையில் ஸ்ரீதேவி இருந்தகவும் அப்போது அவருக்கு நாடித்துடிப்பு இருந்ததாகவும் , அதனால் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டுசென்றதாகவும், ஆனால் அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் என்று ஹோட்டல் தரப்பினர் கூறியுள்ளனர்.

sridevi-death

ஸ்ரீதேவியின் உடல் இன்று மதியம் இந்தியா கொண்டுவரப்படும் நிலையில் பத்திரிகைகளும் ஹோட்டல் தரப்பினரும் கூறுவது உண்மையா அல்லது வதந்தியை என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்