ரஜினிக்காக 7 நாட்கள் சாப்பிடாமல் இருந்த ஸ்ரீதேவி – எதற்காக தெரியுமா ? சுவாரஸ்ய தகவல்.

0
628
- Advertisement -

ரஜினிக்காக சாப்பிடாமல் ஏழு நாட்கள் நடிகை ஸ்ரீதேவி விரதம் இருந்த சுவாரசியமான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. இந்திய சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-
jailer

அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என பலர் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

படம் குறித்த தகவல்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. மேலும், ஜெயிலர் படத்தின் டீசர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது. சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலருமே தங்களுடைய வாழ்த்துக்களை ரஜினிக்கு தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் ரஜினிகாந்துக்காக மறைந்த நடிகை ஸ்ரீதேவி சாப்பிடாமல் இருந்திருக்கும் சுவாரஸ்யமான தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

ஸ்ரீதேவி-ரஜினி படங்கள்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- நடிகை ஸ்ரீதேவியும் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் இவர்கள் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. திரையுலகில் இவர்கள் இருவருமே சூப்பர் ஜோடி என்று பலராலும் கொண்டாட்டப்பட்டிருந்தார்கள். இந்த நிலையில் ரஜினிகாந்த் அவர்கள் 2011 ஆம் ஆண்டு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார். அப்போது அவருக்காக உலகம் முழுவதும் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் பிரார்த்தனை செய்திருந்தார்கள்.

உண்ணாவிரதம் இருந்த ஸ்ரீதேவி:

இதில் நடிகை ஸ்ரீதேவியும் அடங்கும். மும்பையில் இருந்த ஸ்ரீதேவி ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததை அறிந்து உணவில் இந்தபுனேவில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று ரஜினிக்காக பிரார்த்தனை செய்திருந்தார். அது மட்டும் இல்லாமல் ரஜினிகாந்த் பூரண குணமடைய வேண்டிய 7 நாட்கள் உண்ணாவிரதமும் இருந்திருக்கிறார் ஸ்ரீதேவி. இதைப் பற்றி அவர் யாரிடமே கூறவும் இல்லை. ரஜினிகாந்த் குணமடைந்த பிறகு தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமே இந்த தகவலை ஸ்ரீதேவி பகிர்ந்து இருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது.

Advertisement