சிலநாட்களுக்கு முன்னர் நடிகை ஸ்ரீதேவி துபாயில் திடீரென்று பாத்ரூமில் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஸ்ரீதேவியின் இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்தாருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் இன்னும் அவரை இழந்த துக்கத்திலிருந்து மீளவில்லை.
ஸ்ரீதேவியின் மறைவிற்கு பின்னர் அவரை பற்றிய பல விஷயங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய தொழில்அதிபரும் ரிலையன்ஸ் குரூப் ஆப் கம்பெனிஸின் அனில் அம்பானியின் மனைவியும், நடிகை ஸ்ரீதேவியும் நெருங்கிய தோழிகளாம்.அனில் அம்பானியின் மனைவியான டீனா சமீபத்தில் போனி கபூரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவருக்கு நினைவு பரிசு ஒன்றை அளித்துள்ளார்.டீனா அளித்த நினைவுப்பரிசில் ஸ்ரீதேவியின் புகைப்படம் ஒன்று அழகான வெள்ளி ஃபிரேமில் வைக்கப்பட்டிருந்தது.
டீனா அளித்த பரிசை பிரித்து பார்த்ததும் போனிகபூர் ஸ்ரீதேவியை நினைத்து வருத்தம் தாங்காமல் கதறி கதறி அழுதார்.அவரது அழுகையை பார்த்த டீனாவும் கண்கலங்கிவிட்டாராம்.