ஸ்ரீதேவி சிலையை செய்ய சொன்னா பிக் பாஸ் நடிகையை செஞ்சி வச்சிருக்காங்க.! கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.!

0
22694
Sridevi

தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீதேவி முடி சூடா ராணியாக திகழ்ந்து வந்தார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய திரையுலகில் மாபெரும் நடிகையாக திகழ்ந்து வந்தார் நடிகை ஸ்ரீதேவி .

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி துபாயில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மேலும் அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி அவரது மரணம் இயற்கையானது என்று தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அவரது மரணம் குறித்த பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

- Advertisement -

மேலும், அவர் ரூ.240 கோடி ரூபாய் காப்பீடு பணத்திற்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று உதவி ஆணையர் வேத் பூஷண் என்பவர் கூறியிருந்தார். நடிகை ஸ்ரீ தேவி மரணமடைந்த நாள் முதல் அவர் திட்டமிட்டு தான் கொலை செய்துள்ளனர் என்று தொடர்ந்து தெரிவித்துவருகிறார். சமீபத்தில் இது பற்றி அவர் தெரிவிக்கையில் ” ஸ்ரீதேவி இறப்பிற்கான காரணம் அவர் தண்ணீர் தொட்டியில் மூச்சி திணறி இருந்திருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அவரது நுரையீரலில் எந்த அளவிற்கு தண்ணீர் இருந்தது என்று குறிப்பிடப்படவில்லை .அந்த விவரத்தை கேட்ட போதும் அதனை கூற துபாய் போலீசார் தர மறுத்து விட்டார்கள்” என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஸ்ரீதேவி மரணத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு முடிவு தெரியாமல் இருந்தாலும் தற்போது ஸ்ரீதேவிக்கு புகழ் பெற்ற அருங்காட்சியகமான Madame tussauds இல் அவருக்கு மெழுகு சிலை வைத்துள்ளார்கள். இந்த சிலையை அவரது கணவர் மற்றும் மகள்கள் திறந்து வைத்தனர். ஆனால், அது கடந்த ஆண்டு நிகழ்ச்சியில் பங்குபெற்ற விஜயலக்ஷ்மி போல இருக்கிறது என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். மேலும், சிலரோ ஸ்ரீதேவியின் சிலை அவரது மகள் ஜான்வி கபூர் போல இருக்கிறது என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement