நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் தவறவிட்ட பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படங்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் கே. பாலச்சந்தர் இயக்கிய ஜன்னல் மரபு கவிதைகள் என்ற சீரியலின் மூலம் தான் நடிகராக அறிமுகம் ஆகியிருந்தார். அதற்குப் பின் தான் இவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். கடந்த 2002 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் தான் இவர் நடிகர் ஆனார்.
சொல்லப்போனால், இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் சசி தான். தனது முதல் படத்திலேயே ஸ்ரீகாந்த் பல பெண் ரசிகைகள் மத்தியில் சாக்லேட் பாய் பட்டத்தை பெற்றரவர். குறிப்பாக சொல்லப்போனால் அரவிந்த் சாமி, அப்பாஸ், மாதவன் போன்ற நடிகர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்ற பெயரெடுத்த நடிகர்களில் நடிகர் ஸ்ரீகாந்தும் ஒருவர். ரோஜாக்கூட்டம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
ஸ்ரீகாந்த் திரைப்பயணம்:
இதனால் தான் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தது. இதனைத் தொடர்ந்து இவர் ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வந்தார். இருப்பினும் இவர் நடித்த எந்த படமும் பெயர் சொல்லும் அளவிற்கு ஓடியது இல்லை. இதனிடையே இவர் இவர் 2007 ஆம் ஆண்டு வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ஸ்ரீகாந்த் குறித்த தகவல்:
திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகனும் , மகளும் பிறந்தனர். அதற்குப்பின் சசி இயக்கிய பூ படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதனை அடுத்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் நண்பன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய், ஜீவா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. நண்பன் படத்திற்கு பிறகு இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவுமே பெரிதாக ஓடவில்லை.
ஸ்ரீகாந்த் பேட்டி:
கடந்த 13 ஆண்டுகளாக பெரும் தோல்வியையே நடிகர் ஸ்ரீகாந்த் சந்தித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த காபி வித் காதல் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் கலவையான விமர்சனத்தை தான் பெற்றிருந்தது. தற்போதும் இவர் சில படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தான் தவறவிட்ட படங்கள் குறித்து கூறியிருந்தது, சினிமாவில் அதிகபட்ச இழப்புகள் ஒருவருக்கு ஏற்பட்டு இருக்கும் என்றால் அது எனக்கு தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஸ்ரீகாந்த் தவற விட்ட படங்கள்:
எத்தனையோ பிரச்சனைகளை தாண்டி நான் தற்போதும் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அது கடவுள் மற்றும் ரசிகர்களால் தான். நான் நிறைய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படங்களை தவறவிட்டிருக்கிறேன். அது கதை சரியில்லை, பிடிக்கவில்லை என்பதற்காக எல்லாம் இல்லை. ஏதோ ஒரு காரணத்தினால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அந்த வகையில் முதன் முதலாக நான் அறிமுகமாக இருந்த படம் 12b. பின் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரன், மணிரத்தினம் இயக்கத்தில் சூர்யா- மாதவன் நடிப்பில் வெளிவந்த ஆயுத எழுத்து, பாலா இயக்கத்தில் நான் கடவுள், சசி இயக்கிய பிச்சைக்காரன், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்று கூறி இருந்தார்.