கடலில் மூழ்கி இறந்த மருத்துவர்கள் – நேரில் பார்த்த விஷாலின் மேனேஜர் சொன்ன உண்மை.

0
60
- Advertisement -

கன்னியாகுமரி கடற்கரையில் குளிக்க சென்ற மருத்துவப் பயிற்சி மாணவர்களில் 5 பேர் அநியாயமாக கடலில் சிக்கி இறந்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திருச்சியை சேர்ந்த எஸ் ஆர் எம் மருத்துவ பயிற்சி மருத்துவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் நடந்த திருமணத்திற்காக வந்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இவர்கள் திருமணத்திற்கு பிறகு லெமூர் கடற்கரைக்கு சென்று இருக்கிறார்கள். எதிர்பாராத விதமாக ராட்சச அலைகள் அவர்களை கடலுக்குள் இழுத்துச் சென்றிருக்கிறது. இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் எப்படியோ போராடி நான்கு பேரை கரைக்கு கொண்டு வந்தார்கள். ஆனால். அதில் ஒருவர் இறந்துவிட்டார். மீதி பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

விஷால் உடைய மேனேஜர் ஹரிகிருஷ்ணன் பேட்டி :

மேலும், இது குறித்து இவர்களுக்கு உதவி செய்த நடிகர் விஷால் உடைய மேனேஜர் ஹரிகிருஷ்ணன் கூறியிருப்பது, நான்கு பேர் போராடினார்கள். அதில் ஒரு பெண் பல மணி நேரம் போராடினார், நாங்களும் போராடினோம். இருந்தாலும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை. எங்கள் கண்ணெதிரே நான்கு பேரும் இறந்தார்கள். நான் மட்டும் இல்லாமல் என்னுடைய தம்பி சரவணன், பாரத், ராஜா குடும்ப நண்பர்கள் எல்லோருமே சேர்ந்து முடிந்தவரை அவர்களை காப்பாற்ற போராடினோம்.

கன்னியாகுமரி மாவட்ட சம்பவம்:

அதில் நான்கு பேரை தான் கரைக்கு கொண்டு வந்தோம். அப்படி இருந்தும் ஒருவர் கரை வந்து இறந்து விட்டார். எங்களால் முடிந்த வர எட்டு பேரில் மூன்று பேர்தான் காப்பாற்ற முடிந்தது. அரசு அதிகாரிகள் எங்களுக்கு உதவி செய்திருந்தால் அனைவரையும் காப்பாற்றி இருப்போம். அப்போது நாங்கள் தொடர்பு கொண்ட அவசர சேவை மீட்பு பணி அனைவருமே வரவில்லை. அதோடு அந்த இடத்தில் எந்த ஒரு அபாய அறிவிப்பும் இல்லை.

-விளம்பரம்-

அரசு அதிகாரிகள் செய்தது:

கடலோர பாதுகாப்பு படையும் வர இல்லை, மீட்பு பணி குழுவமே இல்லை. இதுவரை அந்த பகுதியில் மட்டும் 40க்கும் மேல் கடல் அலைகளுக்கு சென்று இருக்கிறது. அதில் 15 பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள். மக்களை பாதுகாக்க எந்த சேவை பணியும் வராதது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்த மாதிரி எல்லாம் படத்தில் தான் பார்த்திருக்கிறோம். கடைசியில் எல்லாம் முடிந்த பிறகு தான் காவல்துறை அதிகாரிகள் வருவார்கள். தனது பிறந்தநாளை கொண்டாடி ஆசி பெற்ற அப்புக்குட்டி

போலீஸ் விசாரணை:

அதே போல் தான் காவல் துறை அதிகாரிகள், ஆர்டிஓ அதிகாரி, உயர் அதிகாரி, தீயணைப்பு படை வீரர்கள் எல்லோருமே வந்தார்கள். அவர்கள் வந்து ஒரு பயனும் இல்லை என்று வேதனையுடன் கூறியிருக்கிறார். மேலும், இதில் பிரவீன் சாம், காயத்ரி, சாருகவி, வெங்கடேஷ், சர்வ தர்சித் ஆகியோர் இறந்து இருக்கிறார்கள். இவர்களுடைய உடல் மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement