ஸ்பெஷல் வாய்ப்பு கொடுத்த ஜீ தமிழ், சரிகமப நிகழ்ச்சியால் இலங்கை சிறுமி குடும்பத்திற்கு கிடைத்த விஷயம். அமைச்சர் வாக்குறுதி

0
1378
- Advertisement -

சரிகம நிகழ்ச்சியால் இலங்கை பெண் அசானிக்கு கிடைத்திருக்கும் பரிசு குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பேமஸ் தான். இந்த நிகழ்ச்சி இதுவரை 2 சீசன்களை கடந்து தற்போது 3வது சீசன் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் அர்ச்சனா தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. மேலும், சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் சீனியர் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்தது. தற்போது ஜூனியர் கான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 28 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

- Advertisement -

சரிகமப நிகழ்ச்சி:

பின் இதுவரை 5 பேர் வெளியேறி, தற்போது 23 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு புதிதாக ஒருவர் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவர் பெயர் அசானி கனகராஜ். இவர் இலங்கை கண்டி என்ற பகுதியை சேர்ந்தவர். இவருடைய தந்தை தேயிலை தொழிலாளி. 150 வருடங்களுக்கு முன்னர் இராமேஸ்வரம் தான் இவர்களுடைய சொந்த ஊராக இருந்தது. அதற்குப்பின் இவர்கள் இலங்கை அகதிகளாக இடம் பெயர்ந்து விட்டார்கள்.

அசானி குடும்பம்:

ஒரு தேயிலை தோட்டத்தில் பல வருடங்களாக இவர்களுடைய தலைமுறையே கொத்தடிமைகளாக வேலை செய்து வருகிறது. தற்போது அசானியின் அப்பா, அம்மா, அண்ணன் மூவருமே தேயிலைத் தோட்டத்தில் ஒரு நாளைக்கு 200 ரூபாய்க்கு வேலை செய்து வருகிறார்கள். அசானியின் மற்றொரு அண்ணன் மட்டும் டீ கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். சினிமா, டிவி என்று எதுவும் பார்க்காமல் எப்எம் ரேடியோவில் வரும் பாட்டை கேட்டு அசானி பாடப் பழகியவர். அவரின் திறமையை அறிந்த அவருடைய குடும்பத்தினர் அசானி பாடிய வீடியோவை சரிகமப நிகழ்ச்சியின் ஆடிஷனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

வாய்ப்பு கொடுத்த சரிகமப:

பின் அசானியால் மெகா ஆடிஷனில் கலந்து கொள்ள முடியவில்லை. இதற்கு காரணம் பணப்பற்றாக்குறை தான். இதை அறிந்த ஊர் மக்கள் , உறவினர்கள் என்று எல்லோரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து அசானியை நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள். அசானி கடல் கடந்து தமிழ்நாட்டை நம்பி வந்ததால் இவருக்கு ஒரு வாய்ப்பை நடுவர்கள் கொடுத்திருக்கிறார்கள். தன்னுடைய இன்னிசை குரலால் அரங்கை அசாணி அதிர வைத்திருக்கிறார்.

இலங்கை பெண்:

மேலும், அரங்கை திறமையை கண்டு நடுவர்களே வியந்து போய் விட்டார்கள். வெறும் எப்எம் ரேடியோவில் பாட்டை கேட்டு இப்படியெல்லாம் பாடுவதா? உனக்கு இது கடவுள் கொடுத்த வரம் . இன்னும் பயிற்சி இருந்தால் நீ மிகப் பெரிய அளவிற்கு வருவாய் என்றெல்லாம் நடுவர்கள் பாராட்டி இருக்கிறார்கள். பின் சோசியல் மீடியா முழுவதும் இலங்கை பெண் அசானி குறித்த செய்திகள் தான் அதிகமாக உலா வந்து கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சியின் மூலம் தற்போது அசானி செலிபிரிட்டியாகவே மாறிவிட்டார்.

அசானிக்கு கிடைத்த பரிசு:

இந்த நிலையில் சரிகம நிகழ்ச்சியால் அசானியின் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கும் அற்புதமான விஷயம் குறித்த தகவல் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, இலங்கை கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் அவர்கள் அசானிக்கு நிரந்தரமாக வீடு கட்டி தருவதாக நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார். 15 லட்சம் செலவில் ஒரு வீட்டை கட்டி தருவதாகவும் கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து அசானி குடும்பத்தினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Advertisement