வேன் வெடிச்சு சிதறினப்போ தப்பிக்கக் காரணம் – 2010ல் நடந்த கொர விபத்து குறித்து பேசிய பின்னனி பாடகி ஸ்ரீலேகா பார்த்தசாரதி.

0
692
srelekha
- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் தொடரில் ரஜினியும் ஒன்று. ஒரு பெரிய குடும்பத்தின் சுமையை தனியாக தாங்கி நிற்கும் பெண் தான் ரஜினி. குடும்பத்துக்காக தன்னுடைய ஆசைகளை துறந்து கதாநாயகியாக ரஜினி இருக்கிறார். ஆனால், இவருடைய குடும்பம் இவருக்கு என்ன செய்கிறது? என்பது தான் சீரியலின் கதை. இந்த தொடரில் ரஜினி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக ஸ்ரேயா நடித்து வருகிறார். தற்போது சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் ரஜினியின் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ஶ்ரீலேகா பார்த்தசாரதி. பாடகியாக இவர் மக்கள் மத்தியில் அறிமுகமானவர்.

-விளம்பரம்-

பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார். அதிலும் இவர் பல ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தற்போது ஶ்ரீலேகா சின்னத்திரையில் நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ரீலேகா பார்த்தசாரதி பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் ஆன்மீகம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், இந்த உலகில் நமக்கு மேலே ஒரு சக்தி இருப்பதை தான் ஆன்மீகம் என்று சொல்கிறோம். அந்த சக்தி எனக்குள் ஒரு வித பாசிட்டிவ் எனர்ஜியை தருகிறது என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாகவே இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : அப்புறம் என்ன ம**க்கு இத்தன ஹோட்டல் கட்டி இருக்க – கோவில்கள் குறித்து சூரியின் கருத்தால் திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.

ஶ்ரீலேகா அளித்த பேட்டி:

எங்களுடைய குலதெய்வம் தஞ்சாவூர் பக்கத்தில் திருவாச்சூர் என்கிற இடத்தில் உள்ள மதுரைகாளியம்மன். என்னுடைய இஷ்ட தெய்வம் மதுரை மீனாட்சி அம்மனும். மயிலாப்பூரில் இருக்கின்ற முண்டகண்ணியம்மன் தான். அதுமட்டுமில்லாமல் விநாயகரும், திருப்பதி பாலாஜியும் தாயாரும் கூட எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னுடைய அப்பா ஆன்மீகம் குறித்து நிறைய என்னிடம் பேசுவார். ஏகாதசிக்கு என்னென்ன விஷயங்கள் செய்யணும், முக்கிய நாட்களில் எப்படி வழிபடனும் என்று பல விஷயங்களை சொல்லி இருக்கிறார். அதெல்லாம் தாண்டி எனக்குள்ளே ஒரு கடவுள் நம்பிக்கை இருக்கிறது.

-விளம்பரம்-

2010ல் நடந்த விபத்து:

எப்போதும் நான் சோர்வாக இருந்தாலும் அப்போதெல்லாம் தவறாமல் நான் கேகே நகர் ஐயப்பன் கோவிலுக்கு சென்று விடுவேன். அதனாலே என்னவோ என்னுடைய மகன் ஐயப்பன் சாமி உடைய நட்சத்திரத்தில் தான் பிறந்தான். இது என்னுடைய வாழ்க்கையில் நடந்த அற்புதம் என்று சொல்லலாம். அது மட்டுமில்லாமல் 2010ல் நான் ஒரு மிகப்பெரிய விபத்து எதிர்கொண்டேன். வேனில் ஒரு கச்சேரிக்குப் போய் கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டது. வேன் நிலை தடுமாறி விழுந்தது. அந்த சமயம் நான் எல்லாமே முடிந்துவிட்டது, நாம பிழைக்க மாட்டோம் என்று நினைத்தேன்.

சாய்பாபா குறித்து சொன்னது:

அப்போது, உன் கூட நான் இருக்கேன் என்று கடவுள் தான் என்னை வழிநடத்தினார். அந்த சமயம் தலையில் அடிபட கூடாது என்று என் கையை தலைக்குமேல் வைத்து கொண்டேன். அப்படி பண்ண தூண்டியது கூட கடவுள் தான் என்று நினைக்கிறேன். நான் வேனில் இருந்து வெளியே வந்த அடுத்த நிமிஷமே வேன் வெடித்து சிதறியது. அந்த சம்பவத்துக்கு பிறகு என் வாழ்க்கையில் நிறைய பாசிட்டிவான விஷயங்கள் நடந்தது. அதேபோல் எனக்கு சின்ன வயதிலிருந்தே ஸ்ரீ சக்தி சாய்பாபா உடைய வகுப்புகளுக்கு போவேன். சக்தி சாய்பாபா வேற, சீரடி சாய்பாபா வேற.

ரஜினி சீரியல்:

ஆனால், சாய்பாபா என்பது என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப சின்ன வயதிலேயே வந்து விட்டது. எந்த இடத்திலேயும் எப்பவுமே அவருடைய முகம் என் கண்ணில் படும். சாய்பாபா பஜனை பாடும் போது அவருடைய போட்டோவில் இருந்து பூ கீழே விழும். அவர் என்னுடன் இருப்பதாக நான் நம்புகிறேன். அதுமட்டுமில்லாமல் நான் நடிக்கும் ரஜினி சீரியலில் முதல் சீனே சாய்பாபாவை வணங்குவது மாதிரிதான். அப்பவும் பூ தானாக விழுந்தது. அவருக்கும் எனக்கும் நெருக்கமான ஒரு பாலம் இருக்கிறது என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

Advertisement