ராமாயணத்தில் சீதையாக நடிக்காததற்கு யாஷ் தான் காரணமா? ஸ்ரீநிதி ஷெட்டி ஓபன் டாக்

0
117
- Advertisement -

ராமாயணம் படத்தில் நடிக்காத காரணம் பற்றி நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. இதனை தொடர்ந்து கே ஜி எஃப் 2 படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். மேலும், விறுவிறுப்பான கதைகளும், காட்சிகளுக்கு காட்சி பிரம்மாண்டம், அழுத்தமான வசனம், ஆர்ப்பரிக்கும் சண்டைக்காட்சிகள், பிரம்மிக்க வைக்கும் ஆக்ஷன் என படத்திற்கு தேவையான அனைத்தையுமே கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர். இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விருந்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம். அதேபோல் வட இந்தியாவிலும் கே ஜி எப் 2 படம் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்து இருந்தது.

- Advertisement -

ஸ்ரீநிதி குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தின் மூலம் இளம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை ஸ்ரீநிதி செட்டி. இவர் இந்திய நடிகை, அழகி ஆவார். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் மாடல் அழகி போட்டியில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அதன் பின் தான் இவர் கேஜிஎப் படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார். முதல் படத்திலே இவர் மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் சேர்த்தார் என்று சொல்லலாம்.

ஸ்ரீநிதி படங்கள்:

அதன் பின் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாகியிருந்த கோப்ரா என்ற படத்தில் ஸ்ரீநிதி நடித்திருந்தார். இதுதான் இவருக்கு தமிழில் முதல் படம். இந்த படம் பெரியளவு வரவேற்கப்படவில்லை. இருந்தாலுமே ஸ்ரீநிதிக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து தற்போது இவர் ஹிட் 3 என்ற படத்தில் நடித்திருக்கிறார். நானி நடிப்பில் உருவாகி இருக்கும் ஹிட்: தேர்ட் கேஸ் (HIT: Third Case) படத்தை சைலேஷ் கொலனு என்பவர் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

ஸ்ரீநிதி பேட்டி:

இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடித்து இருக்கிறார். இந்த படம் மே 1ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து இவர் தெலுசு கதா என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல் கிச்சா 47 என்ற படத்திலும் நடிக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஹிட் 3 படத்தினுடைய புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஸ்ரீநிதி கலந்து கொண்டு வருகிறார். அப்போது நிகழ்ச்சியில் ஸ்ரீநிதி, ராமாயணம் படத்தில் சீதையாக நடிப்பதற்கு ஆடிஷன் நடந்தது. அதில் நானுமே கலந்து கொண்டேன்.

ராமாயணம் பற்றி சொன்னது:

அந்த ஆடிஷனில் என்னுடைய நடிப்பு தயாரிப்பாளருக்கு பிடித்து விட்டது. ஆனால், கேஜிஎப் படத்தில் ஹீரோவாக நடித்த யாஷ் ராமாயணம் படத்தில் நடிக்கிறார். அவர் ராமனாக நடித்திருந்தால் நான் சீதையாக நடிப்பதற்கு சரியாக இருக்கும். என்னுடைய ரோல் சீதை என்பதால் அவர் ராவணன் ரோலில் நடிக்கிறார். எங்களுடைய கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகாது. அதனால்தான் நான் இந்த படத்தில் நடிக்கவில்லை.
அதற்குப் பின் தான் சீதையாக நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார் என்று கூறி இருக்கிறார்.

Advertisement