ஆந்திராவில் பேட்ட படத்தை தடுப்பது இந்த நடிகர்கள் தான்.! ஸ்ரீரெட்டி ஷாக்கிங் குற்றச்சாட்டு.!

0
621
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகி இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் இந்த படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

ஆந்திராவில் பேட்ட படம் அதிக தியேட்டர்களில் வெளியாவதை தெலுங்கு பட உலக மாபியாக்கள் தடுத்துள்ளனர் என்று நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். பேட்ட படத்துடன் பாலகிருஷ்ணா நடித்து என்.டி.ராமராவ் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள என்.டி.ஆர், சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடித்துள்ள விதேய ராமா ஆகிய 2 தெலுங்கு படங்களும் பேட்ட படத்துடன் திரைக்கு வந்துள்ளன.

- Advertisement -

அந்த 2 படங்களுக்கும் ஆந்திரா, தெலுங்கானாவில் 90 சதவீதம் தியேட்டர்களை ஒதுக்கி விட்டனர். ரஜினியின் பேட்டபடத்திற்கு குறைவான தியேட்டர்களேகிடைத்துள்ளன. இதனால் அங்குள்ள ரஜினி ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். படம் பார்க்க அவர்கள் நெடும் தொலைவு செல்ல வேண்டி உள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை ஸ்ரஸ்ரீரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் “ஆந்திராவில் பேட்ட படம் அதிக தியேட்டர்களில் வெளியாவதை தெலுங்கு பட உலக மாபியாக்கள் சுரேஷ் பாபு, அல்லு அரவிந்த், சுனில் நரங்க், தில் ராஜூ ஆகியோர் தடுத்துள்ளனர். அவர்களை நினைத்தாலே அவமானமாக இருக்கிறது. இந்த நபர்கள் சுயநலத்தோடு செயல்படுகிறார்கள். இவர்களால் பல சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஆந்திராவில் பேட்ட படத்தை வெளியிடும் வினியோகஸ்தர் நிலைமையை நினைத்தால் கவலையாக உள்ளது. என்று குற்றம் சாட்டியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement