அந்த நடிகர் மது பாட்டிலுடன் என் வீட்டுற்கு வந்தார்.! ஸ்ரீரெட்டியின் அடுத்த சர்ச்சை.!

0
1243
Srireddy
- Advertisement -

-விளம்பரம்-

தெலுங்கு சினி உலகை சில நாட்களாக ஆட்டிப்படைத்து வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி .கடந்த ஒரு மாதமாக ட்விட்டரில் ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் என்ற ஹேஷ் டேக் மூலம் தன்னுடன் நெருக்கமாக இருந்த பிரபலங்கள், தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்கள் என பலரின் பெயர்களை வெளியிட்டு வருகிறார்.சில தினங்களாக இதற்கு சற்று ஒய்வு கொடுத்திருந்த ஸ்ரீ ரெட்டி தற்போது தெலுங்கு நடிகர் நானியின் பெயரையும் தனது அட்டைவனையில் சேர்த்து விட்டார். 

- Advertisement -

தெலுங்கு திரை உலகில் ஒரு சிறந்த அந்தஸ்தில் இருக்கும் நானியை பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது முக நூல் பக்கத்தில் சர்ச்சையான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நடிகர் நானி, நீஙகள் நன்றாக நடிக்கிறீர்கள் மேலும் பார்ப்பதற்கு இயற்கையாக இருக்கிறீர்கள், அது வெறும் உங்கள் மூடி தான்.ஆனால் நிஜ வாழ்க்கையில் நீங்கள் நல்லவர் என்று நிரூபிக்க பல நடங்கங்களை போட்டு வருகிறீர்கள். நீங்கள் பல பெண்களிடம் நல்லவன் போல நடித்து அவர்களை சீரழித்துள்ளிர்கள் உங்களால் பல பெண்கள் பாதிக்க பட்டுள்ளனர். கண்டிப்பா இதற்காக கடவுள் உங்களை ஒரு நாள் தண்டிப்பார்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தநிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரீரெட்டி,நானி சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருந்த போது அவர் புகை,குடி,போதை பொருள் என்று அனைத்திற்கும் அடிமையாக இருந்தார். அப்போது அவருக்கு திருமணம் கூட ஆகவில்லை. அப்போதுதான் எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் ஒரு சில படங்களில் கமிட்டானார் அப்போது அவருடைய படங்களில் எனக்கும் வாய்ப்பு வாங்கி தருவதாக எனக்கு ஆசை காண்பித்தார்.

-விளம்பரம்-

மேலும், அதை காரணம் காட்டி என்னுடன் உறவு வைத்துக் கொண்ட ஒரு முறை குடித்து விட்டு எனது வீட்டுக்கே வந்து விட்டார் என்னையும் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தினார். ஆனால், நான் அவரை எச்சரித்து அனுப்பி விட்டேன். இப்போது அவர் மீது என்னால் வழக்கு தொடர முடியும். ஆனால், அதில் எனக்கு விருப்பமில்லை. எனது நோக்கம் சினிமாவில் நடிகைகளை பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கக் கூடாது. அதற்கு தான் நான் போராடி வருகிறேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி

தெலுங்கு சினிமாவின் Natural Star என்று படத்தை கொண்ட நடிகர் நானி, தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘வெப்பம்’ படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின்னர் ‘நான் ஈ’ , ஆஹா கல்யாணம் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு கடந்த 2012 ஆம் அஞ்சனா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அர்ஜுன் என்ற குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் நானி மீது ஸ்ரீரெட்டி கூறியுள்ள குற்றசாட்டை மறுத்துள்ள நானியின் மனைவி, ஸ்ரீரெட்டி கூறுவதில் துளியும் உண்மை இல்லை. அவருக்கு பட வாய்ப்பு இல்லை என்பதால் இப்படியெல்லாம் பலர் மீதும் குற்றம் சாட்டி
வருகிறார் என்று கூறியுள்ளார்.

Advertisement