நான் அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பேன் என்று நினைக்கிறீர்களா – சீரும் ஸ்ரீரெட்டி.

0
33060
srireddy-Tamanna
- Advertisement -

கடந்த ஆண்டு தெலுங்கு சினிமா வர்த்தக மையத்திற்கு முன்பாக நிர்வாண போராட்டத்தை நடத்தி தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலுங்கின் பிரபல நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி படுக்கையை பகிர்ந்து கொண்டதாக பல்வேறு முன்னணி நடிகர்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார் தெலுங்கு நடிகர் மட்டுமல்லாது தமிழில் உள்ள ஸ்ரீகாந்த் துவங்கி முருகதாஸ் வரை பல்வேறு பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை வைத்தார் ஸ்ரீ ரெட்டி.

-விளம்பரம்-

- Advertisement -

தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்களின் பெயர்களை அவ்வப்போது சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார். தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள ஸ்ரீரெட்டி அடிக்கடி எதாவது சர்ச்சையான விஷயத்தை முகநூலில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது ஆடி காரின் புகைப்படத்தை பதிவிட்டு, அழகு சீரியல் ஸ்ருதி ராஜ் பூர்ணிமா சன் டிவி சீரியல் நபர்கள் மற்றும் தமன்னா வெப் சீரியஸ் நபர்கள் என்று மொட்டையாக குறிப்பிட்டிருந்தார். இந்த விஷயம் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதையும் பாருங்க :இனிமே பண்ண மாட்டோம்னு சொல்லு’. அரசியல் வாதியால் மிரட்டப்பட்டாரா ஆர் ஜே விக்னேஷ். வைரலாகும் வீடியோ.

இந்நிலையில் சென்னை, தனது வீட்டு வளாகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த ஆடி காரை அப்பகுதியில் சின்னத்திரை தொடர்களில் படப்பிடிப்பு நடத்தி வரும் சிலர் சேதப்படுத்தியதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அந்த புகாரில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் தயாரிப்பு மேலாளராக இருக்கும் சந்தோஷ் என்பவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்ற தகவலும் வெளியானது. இந்த நிலையில் நடிகை தமன்னா குறித்து மீண்டும் ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

அதில், கடந்த 10 நாட்களாக தொல்லை என நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நாளையுடன் பால் அழகி தமன்னா வெப் சீரியஸ் படப்பிடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் மற்றுமொரு பதிவில் தமன்னாவிற்கு அனைத்து வசதிகளும் கிடைக்கிறது ஆனால் அவருடைய சந்தோஷத்திற்காக என்னை தொல்லை செய்கிறார்கள் நான் அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பேன் என்று நினைக்கிறீர்களா என்று பதிவிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. இதனால் மீண்டும் காவல் நிலையத்தை ஸ்ரீரெட்டி நாட உள்ளாரா இல்லை வேறு எதாவது சர்ச்சையை கிளப்ப போகிறாரா என்பது தெரியவில்லை.

Advertisement