கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை தி.நகரில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு எதிர்தரப்பினர் போட்டிருந்த பூட்டை உடைக்க முயற்சி செய்த நடிகர் விஷால் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.
தயாரிப்பாளர் சங்க தலைவரான நடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் அழகப்பன், பாரதிராஜா, ரித்தீஷ் உள்ளிட்டவர்கள் அடங்கிய அணியினர், விஷால் சங்கத்திற்கான நிதியை கையாடல் செய்துவிட்டார் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படியுங்க : இவன் என்ன பு***ன் ,என்ன கிழிச்சான்..!விஷாலை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர் அழகப்பன்..!
அதோடு இந்த எதிர் தரப்பினரைச் சேர்ந்தவர்கள் சங்க அலுவலகத்திற்கு நேற்று பூட்டு போட்டனர். சங்க அலுவகத்திற்கு போட்டிருந்த பூட்டை உடைக்க சென்ற விஷால் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கைத செய்யப்பட்டார். மேலும், அவருக்கு சங்க அலுவலகத்தில் நுழைய தடையும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபல சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி விஷால் கைது செய்யப்பட்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில், நடிகர் விஷால் ,சங்கத்தின் நிறைய பணத்தை திருடி அதில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தார் என்று கூறியுள்ளார்.