புஷ்பா படத்தை பார்த்துவிட்டு சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
729
srireddy
- Advertisement -

கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமா உலகில் பிரபலமான முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கில் பிரபலமான நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி படுக்கையை பகிர்ந்து கொண்டதாக பல நடிகர்கள் மீது குற்றச்சாட்டை எழுப்பினார். மேலும், தெலுங்கு நடிகர் மட்டுமல்லாது தமிழில் ஸ்ரீகாந்த், ராலன்ஸ் துவங்கி இயக்குனர் முருகதாஸ் வரை என பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டை சாட்டினார்.

-விளம்பரம்-
pushpa

ஸ்ரீரெட்டியும் சர்ச்சைகளும் :

மேலும் அதற்காக “ரெட்டி லீக்ஸ்” என்ற போராட்டம் ஒன்றையும் உருவாக்கினார். அதுமட்டுமில்லாமல் இந்த போராட்டத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை நடிகை ஸ்ரீரெட்டி இடம் பகிர்ந்து கொண்டார்கள். இந்த நடவடிக்கையால் ஆந்திராவில் நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இவர் சென்னையில் குடியேறினார்.

- Advertisement -

பின் இவர் தமிழ் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. தமிழ் சினிமாவிலும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் பெயரை ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். அதில் முக்கியமாக ராகவா லாரன்ஸ், முருகதாஸ், விஷால் போன்ற முக்கிய புள்ளிகளும் அடக்கம்.

புஷ்பா குறித்து ஸ்ரீரெட்டி :

சமீப காலமாக தான் எந்த சர்ச்சையையும் கிளப்பாமல் இருந்து வருகிறார். அம்மணி பண்ண அலம்பலுக்கு தெலுங்கு சினிமா பக்கம் தலை வைத்து படுக்க முடியாது. இருப்பினும் அம்மணி அடிக்கடி தெலுங்கு சினிமா பற்றி அடிக்கடி எதாவது பதிவிட்டு தான் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான புஷ்பா படம் குறித்து பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

உண்மையில் புஷ்பா படம் எப்படி :

அதில் ‘சமீபத்தில் தான் புஷ்பா படத்தை பார்த்தேன், மிகவும் சுமாரான படம் தான்’ என்று பதிவிட்டுள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்தது ‘புஷ்பா’ திரைப்படம். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்து இருக்கும் இந்த படத்தில் பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று 5 மொழிகளில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை கவரவில்லை. இருப்பினும் அல்லு அர்ஜுன் மற்றும் தெலுங்கு ரசிகர்களை மட்டும் இந்த படம் கவர்ந்துள்ளது.

Advertisement