தெலுங்கு சினி உலகை சில காலமாக ஆட் டிப்படைத்து வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி .சில மாதங்களா ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் என்ற ட்விட்டரில் தன்னுடன் நெருக்கமாக இருந்த பிரபலங்கள், தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்கள் என பலரின் பெயர்களை வெளியிட்டு வருகிறார்.
ஏற்கனவே பல நடிகர், இயக்குணர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விவரங்களை புட்டு புட்டு வைத்து வரும் ஸ்ரீ ரெட்டி. தற்போது ஆந்திராவை விட்டுவிட்டு சென்னையில் தான் வருகிறார். மேலும், ரெட்டி டைரிஸ் என்ற படத்திலும் வருகிறார். சமீபத்தில் இவரது வீட்டில் பைனான்சியர் ஒருவர் புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
சமீபத்தில் இதுகுறித்து பேசியுள்ள ஸ்ரீரெட்டி, ரெட்டி டைரி படத்தின் தயாரிப்பாளருக்கும், ஃபைனான்சியர் சுப்பிரமணிக்கும் இடையே சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதற்கு நான் தான் காரணம் என்று சுப்பிரமணி என் மீது தாக்குதல் நடத்துகிறார். எனவே நான் போலீசில் புகார் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
ஏமேலும், ஏற்கனவே பைனான்சியர் சுப்பிரமணியத்தால் நான் உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறேன். அது தொடர்பாக தெலுங்கானா தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கனவே நான் புகார் அளித்துள்ளேன். அதுமட்டுமல்லில்லாமல் அவர், என்னுடைய ஆடி காரை அபகரிக்க முயல்வதோடு, என்னையும் அடைய முயற்சி செய்கிறார் என்று கூறியுள்ளார்.