சினிமா திரை உலகில் பிரபலமான முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தற்போது அவர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. சமீபத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி அவர்கள் தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் மீது பாலியல் புகார் செய்தது தெலுங்கு திரை உலகையே பீதியை கிளப்பி விட்டது. ஸ்ரீ ரெட்டி அவர்கள் பட வாய்ப்புகளுக்காக சினிமா பிரபலங்களிடம் தன்னையே இழந்துள்ளதாக வெளிப்படையாக பேட்டி அளித்தது மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் அதற்காக “ரெட்டி லீக்ஸ்” என்ற போராட்டம் ஒன்றையும் உருவாக்கினார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த போராட்டத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை நடிகை ஸ்ரீரெட்டி இடம் பகிர்ந்து கொண்டார்கள். தற்போது தான் இந்த ரெட்டி லீக்ஸ் அமைதியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் நேர்காணல் ஒன்றில் கூறியது, டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் அதற்காக தான் நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறிருந்தார்.
இதையும் பாருங்க : படப்பிடிப்பு தளத்தில் விஜய்யிடம் மேஜிக் செய்து காட்டிய நபர். ‘கிரேஸி’ என்று தளபதி கொடுத்த ரியாக்ஷன்.
அப்போ தெலுங்கு மாநிலம் இப்போ தமிழக மாநிலமா!! பிரபலங்கள் நிலை என்ன ஆகப்போகுதோ? என நெட்டிசன்கள் விமர்சித்தும் வந்திருந்தார்கள். தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள ஸ்ரீரெட்டி அடிக்கடி எதாவது சர்ச்சையான விஷயத்தை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது ஆடி காரின் புகைப்படத்தை பதிவிட்டு, அழகு சீரியல் ஸ்ருதி ராஜ் பூர்ணிமா சன் டிவி சீரியல் நபர்கள் மற்றும் தமன்னா வெப் சீரியஸ் நபர்கள் என்று மொட்டையாக குறிப்பிட்டிருந்தார். இந்த விஷயம் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
ந்நிலையில் சென்னை, தனது வீட்டு வளாகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த ஆடி காரை அப்பகுதியில் சின்னத்திரை தொடர்களில் படப்பிடிப்பு நடத்தி வரும் சிலர் சேதப்படுத்தியதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அந்த புகாரில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் தயாரிப்பு மேலாளராக இருக்கும் சந்தோஷ் என்பவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.